விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை ஏற்க மறுத்தாரா ப்ரதீப் ரங்கநாதன் ? இதான் காரணமா ?

0
2314
- Advertisement -

விஜய் படத்தை இயக்க பிரதீப் ரங்கநாதன் மறுத்துவிட்டதாக தற்போது கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் தற்போது இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் லவ் டுடே. இந்த படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து இவர் ரஜினியை வைத்து படம் இயக்கப்போவதாக கூட தகவல்கள் பரவி வந்தது.

- Advertisement -

அதே போல லவ் டுடே படத்திற்கு பின்னர் இவர் விஜய்யை சந்தித்து இருந்தார். மேலும், இவர் அடுத்ததாக இவர் விஜய்யை வைத்து படம் இயக்கப் போவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. இப்படி ஒரு நிலையில் விஜய்யை வைத்து படம் இயக்க மறுத்து இருக்கிறாராம் பிரதீப். தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ஆர்வம் செலுத்தி வருவத்திகாவும் அதனால் தற்போது வேறு ஹீரோவை வைத்து படம் இயக்க விரும்பம் இல்லை என்பதால் விஜய் படத்தை நிராகரித்துவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் இருக்க கோமாளி படம் வந்தே போது பிரதீப் ரங்கநாதனின் பழைய சமூக வலைதள பதிவுகளால் பிரதீப் ரங்கநாதன் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தார். இவர் 2011 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை விமர்சித்து டீவ்ட் போட்டு இருந்தார். அதேபோல் 2014 ஆம் ஆண்டு விஜய்யின் ஜில்லா படத்தை விமர்சித்து பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

பின் லவ் டுடே படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை குறித்தும் இவர் மோசமாக விமர்சித்து பதிவு போட்டு இருந்தார். மேலும், விஜய்யை கேலி செய்துவிட்டு அவர் நடித்த படத்தின் தலைப்பையே வைத்து இருந்தது பெரும் கேலிக்கு உள்ளானது என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட விஜய் 68 படத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இயக்குனர் பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் அர்ச்சனா, வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரை டேக் செய்து வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

இதற்கு ரசிகர் ஒருவர் ‘நான் தளபதியுடன் படம் பண்ணும் மொத்த குழுவுவிற்கும் வாழ்த்துக்களை கூறி இருக்கிறேன். ஏன் தளபதிய மென்ஷன் பண்ணல என்று கேள்வி எழுப்பியதற்கு, தயவு செய்து நடுவில் உள்ள வரிகளை மட்டும் படிக்க வேண்டாம்’ என்று பதில் அளித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.

Advertisement