கர்நாடக தேர்தலில் தோல்வியை தழுவிய பா ஜ க – ரத்ன குமார் மற்றும் பிரகாஷ் ராஜ் போட்ட பதிவு.

0
1434
Modi
- Advertisement -

கர்நாடக தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியது குறித்து இயக்குனர் ரத்தினகுமார் மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடகாவில் கடந்த மே மாதம் பத்தாம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் பயங்கரமாக பிரச்சாரம் செய்து இருந்தார்கள். இந்த நிலையில் நேற்று தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

-விளம்பரம்-

இதில் அதிக வாக்குகள் எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. இதனால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் எல்லாம் உற்சாகத்தில் இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இறுதியில் காங்கிரஸ் தான் தேர்தலில் வெற்றி பெற்றது என்று அறிவித்தார்கள். பின் காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்து மக்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார்கள். நாடு முழுவதும் இருக்கும் அரசியல் பிரமுகர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

கமல் ட்விட்டர் பதிவு:

அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து அதில் அவர் கூறியது, ராகுல் காந்தி ஜி குறிப்பிடத்தகுந்த வெற்றிக்காக உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். காந்திஜி போல நீங்களும் உங்கள் வழியில் நடந்து மக்களின் இதயத்துக்குள் நுழைந்துள்ளீர்கள். மேலும், அவரைப் போல நீங்கள் அன்பும் மனிதத்தன்மையும் கொண்டு உங்கள் வழியில் உலகின் சக்தியை அசைத்திருக்கிறீர்கள். படபடப்பு இல்லா நெஞ்சத்துடன் கூடிய, உங்கள் நம்பத் தகுந்த அனுகுமுறை மக்கள் தூய்மையான காற்றை சுவாசிக்க உதவியிருக்கிறது.

பிரகாஷ் ராஜ் டீவ்ட்:

பிரிவினைவாதத்தை நிராகரிக்க கர்நாடக மக்களை நீங்கள் நம்பினீர்கள், உங்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களும் ஒற்றுமையாக பதிலடி கொடுத்தார்கள். வெற்றிக்காக மட்டுமில்லை, வெற்றியடைந்த விதத்துக்காகவும் வாழ்த்துகள் என்று கூறி இருக்கிறது. இந்நிலையில் பாஜக தோல்வி அடைந்தது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், வெறுப்பையும் மதவெறியையும் விரட்டி அடித்த கர்நாடகாவுக்கு நன்றி. பேரரசர் நிர்வாணமாக நிற்கிறார் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

ரத்தினகுமார் பதிவு:

இவரை அடுத்து லோகேஷிடம் உதவி இயக்குனராக இருந்தவரும், ஆடை பட இயக்குனரும் ஆன ரத்தினகுமார் அவர்கள் பாஜக தோல்வி அடைந்ததை குறித்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதில் அவர் தென் இந்தியாவில் பாஜக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தென்னிந்தியா தற்போது சுதந்திரமான நாடாக ஆகிவிட்டது என்று கூறுகிறார். தற்போது இவர்களுடைய பதிவு சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement