போன வருஷம் Benz, 5 மாசத்துக்கு முன்னாடி Mini Cooper – இப்போ அடுத்த காரை வாங்கிய சஞ்சீவ் ஆல்யா ஜோடி.

0
7928
sanjeev
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் செம்பா என்ற கதாபத்திரத்தில் ஆல்யா மானசாவும் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தனர்.

-விளம்பரம்-

இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு பகிரங்கமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விஜய் டிவியிலும் இதுகுறித்து அதிகமாக பேசப்பட்டு வந்தார்கள். ஆனால், இவர்கள் திருமணம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்தது.

இதையும் பாருங்க : லோகி தான் கமல் வெறியர்னு பாத்தா விக்கியுமா – வெளியான காதுவக்குல ரெண்டு காதல் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.

- Advertisement -

அதற்கு காரணம் ஆலியா மானசா வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது தான் என்று கூறப்படுகிறது.இவர்களுடைய திருமணம் ரகசியமாக முடிவடைந்தாலும் திருமண வரவேற்பு விழா பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றது. கடந்த ஆண்டு இவர்களுக்கு ஆய்லா என்ற மகளும் பிறந்தார். திருமணத்திற்கு பின்னர் நடிகர் சஞ்சீவ் ‘காற்றின் மொழி’ தொடரில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் இந்த தொடர் நிறைவடைந்தது. இப்படி கணவர் மனைவி இருவரும் பிசியாக நடித்து கொண்டு இருக்க இவர்கள் அடுத்தடுத்து கார்களை வாங்கி குவித்து வருகின்றனர். ஏற்கனவே benz காரை வைத்துள்ள இவர்கள், கடந்த சில மாதத்திற்கு முன்பு தான் 30 லட்ச ரூபாயில் ‘Mini Cooper’ காரை வாங்கி இருந்தனர். தற்போது அடுத்ததாக ஒரு காரை வாங்கி இருக்கின்றனர். இதை பார்த்த ரசிகர்கள் இன்னும் எத்தனை கார் தான் வாங்க போறீங்க என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement