நீ ராமர் பக்தனா இரு, ஏசு பக்தனா இரு,ஆனா – ராமர் கோவில் கருத்தும் மோடி குறித்தும் பிரகாஷ் ராஜ் கருத்து.

0
550
- Advertisement -

அயோத்தி ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருக்கும் ராமர் கோவில் அனைவரும் அறிந்ததே. இந்தக் கோவில் நாட்டின் பாரம்பரியம் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கிறது. ஸ்ரீராம் உள்நாட்டு தீர்த்தத்தின்படி இராமன் கோயில் மூன்று அடுக்குகளை கொண்ட தளம். ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. மொத்தம் 392 தூண்களையும், 44 கதவுகளையும் இந்தக் கோயில் கொண்டுள்ளது.

-விளம்பரம்-

மேலும், அயோத்தியில் ராமர் கோயிலுக்கு செல்லும் மேலும், நுழைவாயிலில் யானைகள், சிங்கங்கள், அனுமான் மற்றும் கருடா போன்ற சிலைகள் இருக்கிறது. பாரம்பரிய முறையில் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இப்படி புகழ்பெற்ற அயோத்தி ராமர் கோயில் வருகிற 22 ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. அந்த தினத்தில் அனைவருமே வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தி இருக்கிறார்.

- Advertisement -

பிரகாஷ்ராஜ் பேட்டி:

இதனால் சோசியல் மீடியா முழுவதும் அயோத்தி ராமர் கோவிலை பற்றிய செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள், நீ ராமர் பக்தனாக இரு எனக்கு பிரச்சனை இல்லை. இயேசு பக்தனாக இருபிரச்சனை இல்லை. அல்லா பக்தனாக கூட இரு. இவர்களால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், குருட்டு பக்தனாக இருக்காதே. இவர்களால்தான் ஆபத்து என்று பேசியிருக்கிறார்.

பிரகாஷ்ராஜ்-பாஜக சர்ச்சை:

இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாறு வருகிறது பலரும் இவர் மோடியை விமர்சித்து தான் இப்படி எல்லாம் பேசி இருக்கிறார் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். காரணம், சில ஆண்டுகளாகவே பிரகாஷ்ராஜ் அவர்கள் பிரதமர் மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து பதிவுகளை போட்டு வருகிறார். இவருடைய பதிவுகள் எல்லாம் எதிர்க்கட்சி செய்யும் அளவிற்கு இருக்கிறது.

-விளம்பரம்-

பிரகாஷ் ராஜ் விமர்சனம்:

இதனால் பாஜக சார்பாக மிரட்டல்கள் எல்லாம் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பிரகாஷ்ராஜ் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அந்த வகையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பிரதமர் மோடி தன்னுடைய வீட்டில் பசுக்களுக்கு உணவளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இது குறித்து பிரகாஷ் தன்னுடைய பதிவில், உலகின் மிகப்பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்களின் நாட்டைச் சேர்ந்த ஒருவர். இது என்ன முரண்பாடு? என்று கூறி இருக்கிறார். இப்படி பிரகாஷ்ராஜ் மோடியை விமர்சித்து வருவதால் பலரும் இவரை தேர்தலில் போட்டியிட கேட்டிருக்கிறார்கள்.

prakash

அரசியல் குறித்து சொன்னது:

இந்த நிலையில் இது தொடர்பாக கேரளாவில் நேற்று நடந்த இலக்கிய விழா ஒன்றில் பிரகாஷ்ராஜ், நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பல கட்சியினர் என்னை வலியுறுத்தி வருகின்றனர். பிரதமர் மோடியை விமர்சிப்பதால் நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று குறிப்பாக மூன்று கட்சிகள் சொல்கிறார்கள். இதை முன் வைத்து அந்த கட்சிகள் என்னை வலியுறுத்தார்கள். அவர்களுடைய அழைப்பை நான் ஏற்கவில்லை. அவர்களிடமிருந்து வரும் போன் காலையும் நான் எடுப்பதில்லை. காரணம் அவர்களுடைய அரசியல் வலையில் விழ விரும்பவில்லை. அவர்கள் மக்களுக்காக வரவில்லை, சித்தாந்தத்திற்காக வரவில்லை. நான் மோடியை விமர்சிப்பதால் நல்ல வேட்பாளர் என்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement