போலீஸ் பேச்சை கேட்ட அஜித், படு நாகரீகமாக நடந்துகொண்டுள்ள அஜித் ரசிகர்கள் – போலீஸ் அதிகாரியின் பேட்டி.

0
344
ajith
- Advertisement -

அஜித்தின் திருச்சி சம்பவத்தில் நடந்த சுவாரசியமான விஷங்களை திருச்சி காவல் துணை ஆணையர் ஸ்ரீதேவி ஐ.பி.எஸ் கூறி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார். தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

ஏகே 61 படம்:

இந்த படத்திற்கான பிற நடிகர்களின் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். இந்த படத்தில் ராஜதந்திரம் வீரா, சமுத்திரக்கனி உட்பட பல நடிகர்கள் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அஜித்தின் ஏகே 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக உள்ள தகவல் சில மாதங்களுக்கு முன் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.

அஜித் துப்பாக்கி சுடும் போட்டி:

இந்த நிலையில் நடிகர் அஜித் அவர்கள் திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். அஜித் அவர்கள் இளம் வயதிலேயே கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர். அது மட்டும் இல்லாமல் கார் மற்றும் பைக் ரேஸ் சம்பந்தமான கார் கலந்து கொண்டு வெற்றியும் பெற்று இருக்கிறார். இதனைத்தொடர்ந்து அஜித் துப்பாக்கி சுடுதல் துறையில் பயிற்சிகளை செய்து வருகிறார். கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் கலந்து கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

துப்பாக்கி சுடும் போட்டி:

இந்த நிலையில் திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் உள்ளது. இங்கு 47 வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஓய்வு பெற்ற டிஜிபிக்கள் விஜயகுமார் , தமிழ்ச்செல்வன், நடிகர் அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைதொடர்ந்து 4 பிரிவிகளிலும் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கிறார்.மேலும், அஜித் வருகையை முன்னிட்டு ரைபிள் கிளப்பில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அஜித்தை பார்ப்பதற்கு வளாகத்தின் முன்பு ரசிகர்கள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து இருக்கிறார்கள்.

திரண்ட ரசிகர்கள் கூட்டம்:

அஜித் தன் ரசிகர்களுக்கு கை அசைத்து நன்றி கூறி இருக்கிறார். அப்போது அங்குள்ள ட்ரான்ஸ்ஃபார்மர் மீது ஏறி நின்ற ரசிகர்களை நோக்கி இறங்க சொல்லி சைகை செய்தார். ரசிகர்கள் அஜித்தின் குறிப்பை உணர்ந்து உடனடியாக மின் மாற்றி விட்டு கீழே இறங்கினார்.போட்டிகள் முடிந்ததும் நேற்று இரவு நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பினார். இந்த நிகழ்ச்சியை எந்த சச்சரவும் இல்லாமல் நிறைவு செய்ய முக்கிய காரணமாக இருந்த திருச்சி காவல் துணை ஆணையர் ஸ்ரீதேவி ஐ.பி.எஸ் அஜித் குறித்து பேசுகையில்

அஜித் செய்த செயல்:

அஜித்தைக் காண காத்துக் கொண்டிருந்த ரசிகர்களிடம் அவரைப் பார்த்தால் கிளம்பி விடுவீர்களா என்று கேட்டேன் அதற்கும் அவர்கள் சம்மதம் தெரிவித்தார்கள் உடனே இந்த விஷயத்தை அஜித் சாரிடம் தெரிவித்தேன் அவரைப் பார்த்த ஐந்து நிமிடத்தில் அனைவருமே அங்கிருந்து புறப்பட்டு விட்டனர் அந்த அளவிற்கு நாகரிகமாக அஜித் ரசிகர் நடந்து கொண்டார்கள்.அஜித் சார் கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்த்துவிட்டு எந்த பிரச்சனையும் வரக்கூடாது நீங்க சொல்லுங்க நான் அதை செய்கிறேன் நான் காத்திருந்து கூட செல்கிறேன் எனக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது என்று கூறிவிட்டு எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பை கொடுத்தார்.

Advertisement