டபுள் ஹீரோயின், அதில் ஒருவர் தூக்கி வளர்த்த நடிகை – ரொமான்ஸ் காட்சியில் சங்கடப்பட்டுள்ள ரஜினி – என்ன காரணம் தெரியுமா?

0
452
- Advertisement -

தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மாஸ் காட்டி இருக்கிறது. இவர் சினிமாவில் நுழைந்து 47 வருடங்களுக்கு மேலாக நடித்துக் கொண்டு இருக்கிறார். இன்னும் இவருடைய நடிப்பிற்கும் ஸ்டைலுக்கும் யாரும் பிறக்கவில்லை என்று தான் சொல்லணும். அந்த அளவிற்கு ரஜினி பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறார்

-விளம்பரம்-

இருந்தாலும், இவர் ஒரு நடிகையுடன் நடிக்க பயந்தார் என்ற தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது, நடிகர் ரஜினிகாந்த்- கே எஸ் ரவிக்குமார் கூட்டணியில் வந்த படையப்பா, முத்து படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இந்த படங்கள் 100 நாட்களை தாண்டி எல்லாம் ஓடி இருந்தது. பின் 15 வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய படம் லிங்கா. இந்த படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடித்திருப்பார்.

- Advertisement -

லிங்கா படம்:

மேலும், இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக அனுஷ்கா செட்டி, சோனாக்ஷி சின்ஹா நடித்திருப்பார்கள். இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது ரஜினிகாந்த் கூறியிருப்பது, சோனாக்ஷி சின்காவின் தந்தை சத்ருகாசன் எனக்கு நெருங்கிய நண்பர். அவருடைய மகள் தான் சோனாக்ஷி. அவர் ரொம்ப ரொம்ப சிறு வயது கொண்டவர். லிங்கா படத்தில் ரயில் மீது ஏறி பறந்து பறந்து சண்டை போடும் காட்சியில் நடிக்கும் போது கூட எனக்கு இவ்வளவு பயம் ஏற்பட்டதில்லை.

சோனாக்ஷி குறித்து சொன்னது:

சோனாக்ஷி உடன் காதல் காட்சியில் நடிக்கும் போது நான் ரொம்பவே பயந்தேன். என்னைப் போல அறுபது வயது நடிகருக்கு கடவுள் கொடுக்கும் பெரிய தண்டனையாகவே பார்த்தேன். டூயட் பாடுவதெல்லாம் ரொம்ப பெரிய கொடுமை. என்னுடைய மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா உடனெல்லாம் ஓடி வளர்ந்த குழந்தை சோனாக்ஷி. அவருடன் நடிக்கும் போது நான் ரொம்ப ரொம்ப கஷ்டப் பட்டேன். அதேபோல்தான் அனுஷ்கா செட்டி உடன் நடிக்கும் போதும் எனக்கு இருந்தது என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

சோனாக்ஷி பேட்டி:

அதேபோல் லிங்கா படம் அனுபவம் குறித்து சோனாக்ஷி பேட்டியில், என்னுடைய முதல் தமிழ் படம் லிங்கா. இந்த படத்தின் மூலம் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்திருக்கிறது. ரஜினி என்னிடம் மிகவும் ஸ்வீட்டாக நன்றாக நடந்து கொண்டிருந்தார். ஒரு காட்சியில் இருவரும் நெருக்கமாக வந்து நடிக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னபோது ரஜினி, நோ கிளோஸ் கிளோஸ் ரொமான்ஸ். ஒன்லி பார் பார் ரொமான்ஸ் என்று சொன்னதாக சிரித்துக் கொண்டே சோனாக்ஷி கூறி இருந்தார். இந்த படத்தின் போது ரஜினிக்கு 64 வயது, சோனாக்ஷிக்கு 27 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி திரைப்பயணம்:

கடைசியாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் வசூலையும் பெற்றுத் தந்திருந்தது. இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது ரஜினிகாந்த் அவர்கள் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement