தம்பி மயில்வாகனம் என்ற டயலாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகர் அப்புகுட்டி. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் அப்புகுட்டியும் ஒருவர். இவருடைய உண்மையான பெயர் சிவ பாலன். இவர் வெண்ணிலா கபடிகுழு, அழகர் சாமியின் குதிரை போன்ற படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் கதாநாயகனாக முதன் முதலாக அழகர்சாமியின் குதிரை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தேசிய விருதையும் வாங்கியது. அப்புகுட்டி அவர்கள் பல படங்களில் நடித்து இருந்தாலும் சினிமாவில் தனெக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் நடிகர் அப்புக்குட்டி அவர்கள் முதன் முதலாக நடித்த படத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. நடிகர் அப்புக்குட்டி அவர்கள் முதன் முதலாக 1988ஆம் ஆண்டு மம்முட்டி, தேவயானி நடிப்பில் வெளிவந்த மறுமலர்ச்சி என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடித்த காட்சி ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
இதையும் பாருங்க : கர்ப்பமா இருக்கேன், டயர்டா இருக்கு, ஆனாலும் போகணும். விக்ரம் பிறந்தநாளில் இறந்து போன நடிகை சௌந்தர்யாவின் கடைசி நாட்கள் – இயக்குனர் உருக்கம்.
இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் உண்மையாலுமே இது அப்பு குட்டி தானா? ஆள் அடையாளமே தெரியவில்லை என்று பலரும் கூறி வருகிறார்கள். மேலும்,இவர் மறுமலர்ச்சி படத்தை தொடர்ந்து 2002ஆம் ஆண்டு சொல்ல மறந்த கதை என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு தான் 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த கில்லி படத்தில் வேலுவின் வீட்டிற்கு வரும் சாமியார் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து அழகிய தமிழ் மகன், ஒன்பது ரூபாய் நோட்டு, வெண்ணிலா கபடிகுழு, மதராசபட்டினம், குள்ளநரிக்கூட்டம், அழகர்சாமியின் குதிரை, சுந்தரபாண்டியன், மரியான், வீரம், வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அப்புக்குட்டி அவர்கள் ‘வாழ்க விவசாயி’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து உள்ளார்.
இதையும் பாருங்க : உயிரிழந்த தனது படத்தின் நடிகர். புகைப்படத்துடன் உருக்கம் தெரிவித்த திரௌபதி இயக்குனர்.
இந்த படத்தை கதிர் பிலிம்ஸ் சார்பில் ‘பால் டிப்போ ’கதிரேசன் தயாரித்து உள்ளது. நடிகை வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து உள்ளார்கள். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பி. எல் .பொன்னி மோகன் இயக்கியுள்ளார். அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் தான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும், இந்த படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீடு சமீபத்தில் தான் நடைபெற்றது.