ஏற்கனவே தனது ஊழியர்களுக்கு மூன்று மாத முன் சம்பள கொடுத்த நிலையில் பிறந்தநாளில் பிரகாஷ் ராஜ் செய்த உதவியை பாருங்க.

0
1638
- Advertisement -

கொரோனா வைரஸினால் உலகமே தம்பித்து போய் உள்ளது. உலகம் முழுவதும் யுத்தத்தை விட பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது இந்த கொரோனா வைரஸ் . சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தொடங்கிய இந்த கொரோனா தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இதனால் லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள். இந்த கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

-விளம்பரம்-

இந்தியாவில் நேற்றிரவு 11.30 மணி வரை 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 191 பேர் இந்தியர்கள், 32 பேர் வெளிநாட்டவர்கள். 23 பேர் குணமடைந்துள்ளனர் என்கிறது இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை. தமிழ்நாட்டில் தற்போதுவரை 23 பேர் கொரோனா தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் சென்னையில் ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்தவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனாவுக்கென சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 

- Advertisement -

இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதால் அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். தற்போதைக்கு இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். அதிகம் பேர் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு மருத்துவமனையில் இட பற்றாக்குறையும் ஏற்படும் நிலை விரைவில் உருவாக கூடும்.

இந்த நிலையில் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வீடு இன்றி தவிக்கும் 11 பேருக்கு பாண்டிச்சேரியில் உள்ள தனது தோட்டத்தில் தங்க இடவசதி ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், இதுபோன்ற கஷ்ட காலங்களில் அரசு தான் அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நினைக்காமல் உங்களால் முடிந்த சிறிய உதவிகளை பிறருக்கு உதவி செய்யுங்கள்.

-விளம்பரம்-

இது நம் அனைவரது கடமை. ஒவ்வொரு பிரபலங்களும் இதுபோன்று வீடு இல்லாமல் தவிப்பவர்களுக்கு உதவலாமே என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே நடிகர் பிரகாஷ் ராஜ், கொரோனா பாதிப்பால் அன்றாட வாழ்க்கையில் யாரும் கஷ்டபட கூடாது என்பதற்காக தனது பண்ணை வீடு, சினிமா தயாரிப்பு நிறுவனம், அறக்கட்டளை மற்றும் வீட்டுப் பணியாளர்கள் அனைவருக்கும் மே மாதம் வரைக்கும் சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்து விட்டேன் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement