32 ஆண்டுக்கு முன் நடித்த படத்திலேயே சூர்யாவிற்கு பரிசாக கொடுத்த Rolexஐ அணிந்துள்ள கமல் – அட, எந்த படத்தில் பாருங்க.

0
375
kamal
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது.

-விளம்பரம்-

விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. அதோடு விக்ரம் படம் வெளிவந்து எல்லா இடங்களிலும் முதல் நாளே நல்ல வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். மேலும், விக்ரம் படம் வெளியானதிலிருந்து அனைவர் மத்தியிலும் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. படத்தின் கடைசி நிமிடத்தில் சூர்யா வந்திருந்தாலும் மிரட்டி சென்றிருக்கிறார்.

இதையும் பாருங்க : அன்று சாதியை குறிப்பிட்டதால் வழக்கு போட்ட இளையராஜா, இன்று ஏன் எதவும் சொல்லவில்லை. எழுந்த புதிய சர்ச்சை.

- Advertisement -

பரிசுகளை அள்ளிக் கொடுத்த கமல் :

விக்ரம் படத்தில் ஏற்கனவே கைதி படத்தில் வந்த கார்த்தியின் குரல் மட்டும் கேட்கப்பட்டது. விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ்சிலும் விக்ரம் 2 தொடர்ச்சிக்க்கான அடித்தளத்துடன் தான் முடித்தனர். எனவே, விக்ரம் 2 உருவானால் அதில் கார்த்தயும் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் பல பரிசுகளை கொடுத்து இருந்தார். லோகேஷ் கனகராஜுக்கு புதிய சொகுசு கார் ஒன்றை பரிசளித்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-163-1024x978.jpg

கமல் கொடுத்த rolex :

அதுமட்டுமல்லாது விக்ரம் படத்தில் பணியாற்றிய 13 உதவி இயக்குனர்களுக்கும் புதிய பைக் ஒன்றையும் வாங்கி கொடுதற். இப்படி ஒரு நிலையில் சூர்யாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூர்யாவிற்கு Rolex கை கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கி இருந்தார் கமல். Rolex Day – Date Wrist Watch 128238A K18 என்ற அந்த மாடல் வாச்சின் விலை 54902 அமெரிக்க டாலர் ஆகும். இந்திய மதிப்பில் அதன் விலை 4266612.85 ரூபாய்என்றும் கூறப்பட்டது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-165-1024x1024.jpg

அது கமல் சாரோட வாட்ச் :

இப்படி ஒரு நிலையில் சூர்யாவிற்கு கமல் கொடுத்த rolex வாட்ச் புதிய வாட்ச் இல்லை என்று லோகேஷ் கனகராஜ் கூறி இருந்தார். இதுகுறித்து பேசிய அவர் ‘சூர்யா சாருக்கு, கமல் சார் வீட்டுக்கு வரார்ன்னே தெரியாது. சொல்லப்போனால் அது புது வாட்ச் எல்லாம் இல்லை. கமல் சார் மனதுக்கு மிகவும் நெருக்கமான வாட்ச் அது. ரொம்ப வருசமாக அதை வைத்து இருக்கிறார். அதை தான் சூர்யா சாருக்கு கொடுத்தார்’ என்று கூறி இருந்தார்.

மைக்கேல் மதன காமராஜ் :

ஆனால், உன்மையில் கமல் அந்த வாட்சை தான் நடித்த படங்களின் கூட அணிந்து நடித்து இருக்கிறார். ஆம், 1990 ஆம் ஆண்டு கமல் 4 வேடங்களில் நடித்து அசத்திய ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இந்த வாட்சை கமல் அணிந்து நடித்து இருக்கிறார். இந்த படத்தில் மதன் கதாபாத்திரத்தில் நடித்த கமல், இந்த வாட்சை அணிந்து நடித்து இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement