காவிரி போராட்டம் ! பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வந்த ரசிகர்களை திருப்பி அனுப்பிய நடிகர்

0
935

தமிழ் நாட்டில் இப்போது மிகப்பெரிய பிரச்னையாக ஓடிக்கொண்டிருப்பது ஸ்டெர்லைட் மற்றும் காவேரி மேலாண்மை போராட்டம் மட்டும் தான்.விவசாயிகள் பிரேச்சனையாக இருந்த இந்த விஷயம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

prasanth

மேலும் பல பிரபலங்களும்,நடிகர்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் நடிகர் பிரசாந்த் தனது ஆதரவை வித்யாசமாக தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்த நடிகர் பிரசாந்த் பின்னர் ஒரு காலகட்டத்தில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் படு
தோல்வியடைந்தது.பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு சாகசம் என்னும் படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆனார் பிரசாந்த்.ஆனால் அந்த படமும் சரியாக ஓடவில்லை.

actor prasanth

இந்நிலையில் இன்று தனது 45 பிறந்தநாளை அடியெடுத்து வைத்துள்ள பிரசாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை.மேலும் தனது பிறந்தநாளை கொண்டாட வந்த ரசிகர்களையும் திருப்பியனுப்பிவிட்டார்.இதற்க்கு காரணம் தமிழ்நாடு முழுவதும் காவிரி,ஸ்டெர்லைட் போன்ற பிரச்சனைக்காக மக்கள் அனைவரும் போராடி வரும் நிலையில், நான் என்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவது மிக முக்கியம் இல்லை என்று கூறி இருக்கிறார்.