விஜய் பத்தி நான் அப்படி சொல்லவே இல்லை- சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்த நடிகர் பிரசாந்த்

0
357
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக ஜொலித்து இருந்தவர் பிரசாந்த். இவர் பிரபல இயக்குனரும், நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவார். ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த பிரசாந்த்துக்கு இடையில் சினிமாவில் மார்க்கெட் குறைய தொடங்கியவுடன் இவர் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்து இருந்தார். இதனால் பிரசாந்த் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போனார். இடையில் அப்பப்போ துணை கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது இவர் அந்தகன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரகனி, யோகி பாபு, ஊர்வசி, வனிதா விஜயகுமார், லீலா சாம்சன், மனோபாலா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை பிரசாந்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கி இருக்கிறார். இந்த படம் ஹிந்தியில் ஆயூஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக்.

- Advertisement -

அந்தகன் படம்:

மேலும், இந்த படம் வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி வருகிற வெளியாக இருக்கிறது. இதனால் இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் பிரசாந்த் பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று இருந்தது. அதில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பிரசாந்தும் பதிலளித்து வந்திருந்தார்.

விஜய் குறித்து பிரசாந்த் சொன்னது:

அப்போது சில மாதங்களுக்கு முன்பு பேட்டியில் விஜயின் கோட் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு நானும் அவரும் சேர்ந்து தான் நடிக்கிறோம் என்று சொன்னீர்கள். இப்படி நீங்கள் பேசியிருந்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக மாறி இருந்தது. இதற்கு உங்களுடைய கருத்து என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு பிரசாந்த், சார், கோட் என்பது ஒரு மல்டி ஸ்டார் படம். அந்த படத்தில் விஜய், நான் உட்பட பல நடிகர்கள் சேர்ந்து நடித்து இருக்கிறோம்.

-விளம்பரம்-

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரசாந்த்:

அதைத்தான் நான் அங்கு சொன்னேன். வேறு எதையுமே நான் அங்கு சொல்ல வரவில்லை. என்னை பொறுத்தவரை அது ஒரு சர்ச்சையே கிடையாது. வாழ்க்கை ரொம்ப சிம்பிள் சார். தேவையில்லாத விஷயங்களை எல்லாம் நாம் நம் தலைமேல் போட்டுக்க கூடாது. என்னோடு வெற்றியிலும், தோல்வியிலும் என்னுடைய அப்பா, அம்மா, ரசிகர்களோட அன்பு எப்போதுமே எனக்கு உறுதுணையாக இருக்கிறது. அதற்கு பிறகு எனக்கு என்ன வேண்டும் என்று பதில் அளித்திருக்கிறார்.

கோட் படம்:

லியோ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜயின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், இவானா உட்பட பல பிரபலங்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது.

Advertisement