எங்களுக்கு ஏன் விருது கொடுக்க மாற்றங்க – ராஜா ராணி, பாரதி கண்ணம்மா இயக்குனர் கேள்வி.

0
519
Praveen
- Advertisement -

விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வெற்றிகரமான நிறைவடைந்த பாரதி கண்ணம்மா சிரியலின் இரண்டாம் பாகம் தற்போது தொடங்கி இருக்கிறது. பாரதி கண்ணம்மா சிரியலின் முதல் பாகம் பாரதி கண்ணம்மாவிற்கு தாலி காட்டுவதுடன் முடிந்து விடும் என்றிருந்த நிலையில் சுபம் என்று வருவதற்கு மாறாக தொடரும் என்று வந்தது. ஒரு வழியாக முடிந்து விட்டது என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் பாரதி கண்ணம்மா 2 என்ற புதிய கதை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்த கதையில் பாரதி வசதியான வீட்டு பையன் ஆனால் குடிகாரன், கண்ணம்மாவோ ஜெயிலில் இருந்து வருகிறார். இவர்களை மையமாக வைத்துதான் சீரியல் இனி தொடர போகிறது. இது ஒரு பக்கம் இருக்க விஜய் டிவியில் ஒளிபபராகும் ராஜா ராணி சீரியலும் தற்போது இரண்டாம் பாகமானது தொடங்கி வெற்றிகரமான ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இரண்டு சீரியல்களை இயக்கி வருபவர் தான் பிரபல இயக்குனர் பிரவீன் பென்னெட் .

- Advertisement -

பிரவீன் பென்னெட் :

இவர் ராஜா ராணி சீரியலை மட்டும் இயக்காமல், பாரதி கண்ணம்மா, பொம்மைக்குட்டி அம்மாவுக்கு, சரவணன் மீனாட்சி என பல சீரியல்கள் இயக்கி இருக்கிறார். அதோடு இவர் இயக்கும் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் கொடுப்பதினால் இவருடைய சீரியலில் சிறிய கதாபாத்திரத்திலாவது நடித்து விட வேண்டும் என்று போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் இவர் சீரியலில் நடிக்கும் பல பேர் அடுத்தடுத்து சீரியலுக்கு வாய்ப்பு கிடைத்து நடித்து வருகின்றனர்.

போட்டி போடும் நடிகர்கள் :

ஆனாலும் கூட இவர் இயக்கம் பல சீரியல்கள் பல விதமான சர்ச்சையில் சிக்கியும் தான் வருகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ராஜா ராணியில் தன் கணவரை சின்னையா என்று அழைக்கும் முறை இவர்தான் அறிமுகப்படுத்தியிருந்தார். மேலும் இவரின் சீரியல்களில் பலவிதமான படங்களில் இருந்தும் மற்ற சீரியல்களில் இருந்தும் கதைகள் காப்பியடிக்கப்பட்டு எடுக்கப்படுகிறது என்று நெட்டிசன்கள் அவ்வப்போது கலாய்த்து வருவதுண்டு. இருந்தாலும் இந்த சீரியல் டிஆர்பியில் குறையாமல் முன்னணியில் இருந்து வருவது குறிப்பிடப்பட்டது.

-விளம்பரம்-

பிரவீன் பென்னெட் பேட்டி :

இப்படிப்பட்ட நிலையில் தான் இயக்குனர் பிரவீன் பென்டென்ட் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார் “அந்த பேட்டியில் வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி சின்னத்திரையாக இருந்தாலும் சரி அதில் வெற்றி பெறுவதற்கு முக்கியமான காரணம் அதன் இயக்குனர்கள் தான். அதற்கு அடுத்ததாக தான் நடிகர்கள் இருந்து வருகின்றனர். ஆனால் சீரியலின் வெற்றிக்கு காரணமாக இருக்கும் இயக்குனர்களுக்கு ஏன் விருதுகள் கொடுக்கப்படுவதில்லை. இது தனக்கு வருத்தமாக இருக்கிறது என்று அந்த பேட்டியில் கூறினார்.

மேலும் ஒரு நடிகர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தால் அந்த பேட்டி வைரலாவதுடன் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக செல்கிறது, ஆனால் அதுவே ஒரு இயக்குனர் பேட்டி கொடுத்தால் அவை அதிகமாக செல்வதில்லை என்றும் மக்கள் அவற்றை புறக்கணிக்கின்றனர் என்றும் இது எப்போது மாறப்போகிறது என்று தெரியவில்லை என இயக்குனர் பிரவீன் பென்னெட் அந்த பேட்டியில் வருத்தம் தெரிவித்து இருந்தார்.

Advertisement