தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் சங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் பாய்ஸ். இந்த படத்தில் நடிகர் சித்தார்த், நகுல், ஜெனிலியா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
https://www.youtube.com/watch?v=jIKrP05_zTM
மேலும், இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களும் மிகுந்த வரவேற்பு பெற்று இருக்கிறது. இன்னும் இந்த பாடல்கள் எல்லாம் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஐயப்பன் பாடல் பயங்கர பேமஸ். பலரும் இந்த பாடலுக்கு ஏ ஆர் ரகுமான் தான் இசை அமைத்து இருந்தார் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால், உண்மையில் இந்த பாடலுக்கு இசையமைத்தவர் பிரவீன் மணி தான்.
பாய்ஸ் பட ஐயப்பன் பாடல்:
இந்தப் பாடலை பாடியவர் சங்கர் மகாதேவன், சின்மயி. இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் இசைக்கலைஞர் பிரவீன் மணி கூறி இருப்பது, பாய்ஸ் படத்தில் ஐயப்பன் பாடலுக்கு நான் தான் இசையமைத்தேன். ஏ ஆர் ரகுமான் அவர்கள் அப்போது ரொம்ப பிசியாக இருந்தார். அவர், நீயே இந்த பாடலுக்கு டியூன் போட்டு விடு என்று சொல்லிவிட்டு போயிட்டார். அதற்கு பிறகு தான் அந்த பாடலை போட்டேன்.
https://twitter.com/chettyrajubhai/status/1789256976301527514
பிரவீன் மணி பேட்டி:
இந்தப் பாடல் வரிகளை வாலி எழுதி இருக்கிறார். சங்கர் மகாதேவன்-சின்மயி பாடியிருந்தார். இந்த பாடல் ஒரு சின்ன இடத்தில் மட்டும் தான் பயன்படுத்தப்படும். என்னை நம்பி இதே மாதிரி ஏ ஆர் ரகுமான் நிறைய படங்களில் பாடல்களை கொடுத்து இருக்கிறார் என்று கூறி இருக்கிறார். இந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான இசை கலைஞர்களின் ஒருவர் பிரவீன் மணி.
பிரவீன் மணி குறித்த தகவல்:
இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் போன்ற பிற மொழி படங்களிலும் இசை அமைப்பாளராகம் பாடகராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் ஏ ஆர் ரகுமான் உடன் பல வருடமாக இணைந்து பணியாற்றி வருகிறார். இவர் லிட்டில் ஜான் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது வரை இவர் படங்களில் பிஸியாக பயணித்துக் கொண்டிருக்கின்றார்

ஏ ஆர் ரகுமான் குறித்த தகவல்:
இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார் ரகுமான் . கிட்டத்தட்ட இவர் சினிமா உலகில் இசையமைப்பாளராக நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. மேலும், இவர் சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் புகழ் பெற்றவர்.






