GOAT படத்தில் AI மூலம் விஜயகாந்த் – பிரேமலதா வைத்த செக், வெளியான திடீர் அறிக்கை

0
400
- Advertisement -

மறைந்த நடிகர் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதாவின் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. கேப்டன் விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டிப்போட்டு இருந்தது. கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். மேலும், விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை அதிகம் பாதித்து இருக்கிறது. விஜயகாந்த் மறைவுக்கு அவரது ரசிகர்கள் கொடுத்த அனுப்புகை, அவர் எவ்வளவு பிரபலமான நபர் என்பதற்கு சான்றாக அமைந்திருந்தது.

-விளம்பரம்-

பின் விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த வழியில் விஜயகாந்தினுடைய பணியை பாராட்டி ‘பத்மபூஷன்’ விருது சில மாதங்களுக்கு முன் இந்திய அரசு அறிவித்து இருந்த நிலையில், அவரின் மறைவுக்கு பின்பு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி மர்முவிடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டார். மேலும் விஜயகாந்த்க்கு ‘பத்மபூஷன்’ விருது வழங்கியதற்கு ரசிகர்கள், தேமுதிக தொண்டர்களும் பலருமே வாழ்த்தி சந்தோஷப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மீண்டும் விஜயகாந்த் திரைப்படங்களில்:

இந்நிலையில் தான் தமிழ் திரையுலகில் சில திரைப்படங்களில் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்தை பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்தை சுமார் பத்து நிமிட காட்சியில் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் படக்குழு பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதேபோல் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் ‘படைத்தலைவன்’ படத்திலும் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்தை பயன்படுத்த போவதாக தகவல்கள் கிடைத்தன.

தொடர்ந்து வரும் பட அறிவிப்புகள் :

சமீபத்தில் இயக்குனர் விஜய் மில்டன் அவர்கள், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வெளியாக இருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திலும் நடிகர் விஜயகாந்தை நீங்கள் எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கேப்டனை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த அனுமதி கேட்க வேண்டும் என்ன விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா ஒன்றை அறிக்கை விடுத்துள்ளார்.

-விளம்பரம்-

பிரேமலதா அறிக்கை:

அந்த அறிக்கையில், “தமிழ் திரை உலகைச் சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதி இல்லாமல் இது மாதிரியான அறிவிப்புகளை வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும்’ என்று பிரேமலதா குறிப்பிட்டிருந்தார்.

அனுமதி கேட்க வேண்டும் :

அதனைத் தொடர்ந்து அவர், ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் கேப்டனை திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே அனுமதி இல்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடகச் செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கேப்டனின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.

Advertisement