மலர் டீச்சராக அவரை நடிக்க வைக்க நிவீன் பவுலி கூட எவ்ளோவோ முயற்சித்தார் முடியல – பிரேமம் இயக்குனர் சொன்ன சீக்ரெட்.

0
2954
sai
- Advertisement -

ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்த படம் பிரேமம். இந்த படம் மலையாளத்தில் தான் வெளிவந்தது. தென்னிந்திய ரசிகர்களால் பிரேமம் படத்தை இன்றும் கூட மறக்க முடியாது. 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த மலையாள படம் தான் பிரேமம். இந்த படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருப்பார்கள்.பிரேமம் படம் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ் மொழி மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இன்னும் அந்த படத்தின் நினைவுகள் ரசிகர்கள் மனதிலேயே நிற்கிறது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

இந்த படம் தமிழில் சேரன் இயக்கத்தில் வந்த ஆட்டோகிராப், மற்றும் ஜெயம் ரவியின் தீபாவளி படமும் கலந்த கலவையாக தான் இருந்தது என்று சொல்ல வேண்டும். மேலும், இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடித்து இருந்தாலும். இதில் பெரிதும் பிரபலமானது சாய் பல்லவி நடித்த மலர் கதாபாத்திரம் தான். இதற்கு பின்னர் இவர் தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளில் பிஸியான ஒரு நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

இதையும் பாருங்க : பேட்டரி, பேன், பில்டர் வசதிகள் கொண்ட மாஸ்க் – ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இசைப்புயல். விலை மட்டும் எவ்ளோ தெரியுமா ?

- Advertisement -

கடந்த சில தினங்களாக பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ், சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர், உங்கள் படங்களில் தமிழ் மொழி மீதான உங்கள் ஆர்வம் தெரிகிறது. குறிப்பாக மலர் கதாபாத்திரம், பிறகு படத்தில் நீங்கள் பயன்படுத்தும் தமிழ் பாடல்கள். இது நீங்கள் சென்னையில் வசித்ததால் வந்த தாக்கமா? தமிழ் மொழியின் தாக்கம் மலையாள சினிமாவில் இருப்பதை உணர்கிறீர்களா?, மலர் கதாபாத்திரத்திற்கு பதிலாக ஒரு மலையாளம் பேசும் பெண்ணை மாற்றுவது பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன? என்று கேட்டிருந்தார்.

ரசிகரின் இந்த கேள்விக்கு பதில் அளித்த இயக்குனர் அல்போன்ஸ், “நான் முதலில் எழுதும்போது மலையாளத்தில் தான் எழுதினேன். மலையாள வெர்ஷனில் நடிகை அசின் மலராக நடிக்க வேண்டும் என விரும்பினேன். அந்த கதாபாத்திரம் கொச்சியிலிருந்து வருவதாக இருந்தது. ஆனால், என்னால் அசினை தொடர்பு கொள்ள முடியவில்லை. நிவின் கூட முயற்சித்தார்.பிறகு அந்த யோசனையை கைவிட்டு, தமிழில் எழுதினேன். இவை எல்லாம் ஸ்க்ரிப்ட் நிலையிலேயே நடந்தது. நான் ஊட்டியில் படித்தேன், சினிமா படிப்புகளுக்காக சென்னையில் வசித்தேன். இதுதான் என்னுடைய சினிமாவில் தமிழ் கனெக்ட் இருப்பதற்கான காரணம் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement