பேட்டரி, பேன், பில்டர் வசதிகள் கொண்ட மாஸ்க் – ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இசைப்புயல். விலை மட்டும் எவ்ளோ தெரியுமா ?

0
1011
arr
- Advertisement -

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை.தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர்.

-விளம்பரம்-

கொரோனா தொற்றில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதே போல பல பிரபலங்களும் தடுப்பூசி போட்டுகொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஏ ஆர் ரஹ்மானும் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக சமீபத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். கொரோனா தொற்றில் இருந்து காத்துக்கொள்ள பல நெறிமுறைகளை சுகாதார துறை அறிவித்து உள்ளது. அதில் மிக அத்யாவாசிமானது முகக்கவசம்.

- Advertisement -

கடந்த ஓராண்டுக்கும் மேலாக மக்கள் அனைவரும் வெளியில் வந்தால் மாஸ்க் அணியாமல் வருவது கிடையாது. மேலும், எந்த மாஸ்க் சிறந்தது என்ற சந்தேகம் இன்னும் பலருக்கு நிலவி வரும் நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் அவரது மகன் இருவரும் சமீபத்தில் அணிந்த மாஸ்க் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது சந்தையில் பல விதமான மாஸ்க் விற்கப்படுகிறது.

அதில் எது பேக்டீரியாவை 100 சதவீதம் தடுக்கும் என்பது பலருக்கு தெரியாது. இதனால் வசதிக்கு ஏற்றார் போல விலை உயர்ந்த மாஸ்க்கை பயன்படுத்துகின்றனர். ஆனால், ஏ ஆர் ரஹ்மானின் இந்த மாஸ்க் எதோ வின் வெளிக்கு செல்வோர்கள் அணிவது போல இருக்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இந்த மாஸ்க்கை எங்கு வாங்கினீர்கள் என்று கேள்வி எழுப்பத் துவங்கினர்.

-விளம்பரம்-

ஒரு சிலரோ இதன் விலை 39999 என்று பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பாலாஜி துரைசாமி என்பவர் இது Lg நிறுவனம் தயாரித்த LG Puricare Wearable Air Purifier ஆ ? என்று கேட்டுள்ளதோடு துபாயில் அதன் விலை 700 திராம்ஸ் (அதாவது இந்திய ருபாய் மதிப்பில் 14000) என்று பதிவிட்டுள்ளார்.மேலும், LG Puricare Wearable Air Purifier -ல் பேட்டரி, காற்றை சுத்தப்படுத்த பில்டர் மற்றும் சிறிய பேன் ஆகிவை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement