அக்ஷய் குமார் பற்றி நடிகர் ப்ரித்விராஜ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரித்விராஜ். இவர் மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகர் ஆவார். இவருடைய தந்தை சுகுமாரன். இவரும் மலையாளத்தில் பிரபலமான நடிகர் ஆவார். அதேபோல் தாயார் மல்லிகா சுகுமாரனும் பிரபலமான நடிகை. இவருக்கு இந்திரஜித் சுகுமார் என்ற மூத்த மகன் இருக்கிறார்.

இவரும் மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர்களுடைய இரண்டாவது மகன் தான் பிரித்விராஜ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் 2002 ஆம் ஆண்டு நந்தனம் என்ற மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
பிரித்விராஜ் திரைப்பயணம்:
அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். அதற்கு பிறகு இவருக்கு தமிழ் மொழியில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின் இவர் மலையாள மொழியில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி இருந்த படம் ஆடு ஜீவிதம். இயக்குனர் பிளஸ்ஸி இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் அமலா பால், கோகுல், Jimmy Jean-Louis உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

எம்புரான் படம்:
இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது. இதை அடுத்தும் இவர் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் எல்2; எம்புரான். இந்த படத்தினுடைய முதல் பாகம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=yuER2F7ZDi0
பிரித்விராஜ் பேட்டி:
இந்த படத்தில் டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், சுராஜ், சானியா ஐயப்பன், கிஷோர், சாய்குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படத்திற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று பிரித்விராஜ் ப்ரொமோஷன் செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இந்த படத்திற்காக அளித்த பேட்டியில் அக்ஷய்குமார் குறித்து பிரித்விராஜ் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், அக்ஷய் குமார் சார் நடித்திருந்த செல்ஃபி திரைப்படத்தை நான் தான் தயாரித்திருந்தேன்.
View this post on Instagram
அக்ஷய்குமார் பற்றி சொன்னது:
அந்த படத்திற்காக அவர் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை. காரணம், இந்த படம் வெற்றி பெற்று லாபத்தை ஈட்டினால் நான் சம்பளம் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னார். ஆனால், அந்த படம் சரியாக போகவில்லை. அதனால் அவர் சம்பளமும் வாங்கவில்லை என்று கூறியிருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்ஷய்குமார் நடிப்பில் வெளிவந்த படங்கள் எதுவுமே பெரிதாக கைகொடுக்கவில்லை. அவருடைய படங்கள் எதுவும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம்பெறவில்லை. இதை தொடர்ந்து தான் 2023 ஆம் ஆண்டு பிரித்விராஜ் தயாரிப்பில் செல்பி படம் வெளியாகியிருந்தது. ஆனால், இந்த படமும் பெரிய அளவு வெற்றி பெறவில்லை. இதனால் தான் அக்ஷய்குமார் சம்பளம் வாங்கவில்லை.






