தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக பணிபுரிந்து பின்னர் 'ராஜா ராணி ' என்ற தனது முதல் படைப்பிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் அட்லீ.
https://twitter.com/Atlee_dir/status/1089415655877537792
அதன் பின்னர் விஜய்யை வைத்து 'மெர்சல்' , 'தெறி ' என்று இரண்டு ஹிட் படங்களை கொடுத்த அட்லீ. தற்போது மீண்டும் விஜயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து விஜய் 63 படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் தனது மனைவி ப்ரியாவின்பிறந்தாளை கொண்டாடியுள்ளார் அட்லீ.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா. பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்திக்கு பதிலாக லைட்டரயும் கத்திக்கு பதிலாக ஸ்ப்பூனை பயன்படுத்தினராம் அட்லீ. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.





