நீ தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பங்குபெற மாட்டேன் என்று கூறியிருக்கிறேன் மன்னித்து விடு.! உருகிய பிரியா பவானி சங்கர்.!

0
168980
priya-Bhavani-shankar
- Advertisement -

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். தொலைக்காட்சியில் இவருக்கு கிடைத்த பிரபலம் மூலம் அதன் பின்னர் மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவும் அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவருக்கு என்று பல்வேறு ரசிகர்கள் பட்டாலமே உருவானது.

-விளம்பரம்-
Image may contain: 4 people, people smiling, people standing

அந்த படத்தை தொடர்ந்து ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். மாஸ்டர் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்ட பட்டது. இதை தொடர்ந்து மீண்டும் எஸ் ஜே சூர்யா நடிக்க இருக்கும் படத்திலும் ப்ரியா பவானி சங்கர் கமிட் ஆகி இருக்கிறது . அதே போல தமிழில் மிகப்பெரிய நடிகரான கமலின் ‘இந்தியன் 2 ‘ படத்தில் பிரியா பவானி சங்கர் கமிட் ஆகியுள்ளார். சங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாவதாக இந்த திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : பிக் பாஸ் பட்டத்தை வென்றது இவர் தான்.! ட்வீட் செய்த டாப் 10 சுரேஷ்.! இவர் சொன்னா சரியா தான இருக்கும்.!

- Advertisement -

இந்நிலையில், மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியன்-2 படத்திற்கான தேதிகளை கமல்ஹாசன் ஒதுக்கியுள்ளார். மேலும், கடந்த சில நாட்களாக இந்த படத்தில் பணிபுரிவைபவர்களின் விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தில் விஜய் டிவி தொகுப்பாளராக ஜெகன் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

இந்த நிலையில் ஜெகன் இந்தியன் 2 இணைந்தது குறித்து அறிந்த பிரியா பவானி சங்கர், ஜெகனை வீட்டில் நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். மேலும், அவருடன் சித்தார்த்தும் சென்றுள்ளார். அதே போல பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நான் தொலைக்காட்சியில் இருந்த போது நீங்கள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் பங்கு பெற நிராகரித்த காலமும் இருக்கிறது.. அதர்க்காக நான் இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்களை நேரில் சந்திப்பதற்கு முன்பாக நான் அவ்வாறு நினைத்துளேன். ஆனால், உங்களை நேரில் சந்தித்த பின்னர் அப்படி நினைப்பதை நிறுத்திவிட்டேன். நன்றி ஜெகன் அண்ணா, எங்களுடன் பணிபுரிவது எனக்கு மகிழ்ச்சி. உங்கள் குழந்தை எங்களை வரவேற்றே விதம் என்னால் மறக்க முடியாது. கண்டிப்பாக இதை விட அதிக உணவையும் அன்பையும் உங்களுக்கு பரிமாறுவேன் என்று கூறியுள்ளார். ஜெகன் போலவே ப்ரியா பவானி சங்கரும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். இவரும் கவினும் இணைந்து கிங்ஸ் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியில் கூட தொகுப்பாளராக பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

மேலும் , ஜெகன் குறித்து பிரியா பவானி சங்கர் இப்படி குறிப்பிட்டுள்ளதற்கு முக்கிய காரணமே ஜெகன் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய கனக்க்ஷன் நிகழ்ச்சி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது . அந்த நிகழ்ச்சியில் ஆண் பெண் என்று பாகுபாடு பார்க்காமல் ஜெகன் பல முறை ரசிகர்கள் முகம் சுளிக்கும் வகையில் இரட்டை வசனத்தை பேசி இருக்கிறார் . எனவே, பிரியா பவானி சங்கர் ஜெகன் தொகுத்து வழங்கிய கனக்க்ஷன் நிகழ்ச்சியில் பங்குபெற தான் நிராகரித்து இருப்பார் என்று நம்பப்படுகிறது.

Advertisement