குழுந்தையை காப்பாற்ற உதவி கேட்டு வீடியோ வெளியிட்ட PBS- ஆடையை கேலி செய்தவருக்கு கொடுத்த பதிலடி.

0
744
priya
- Advertisement -

தொலைக்காட்சியில் இருந்து பல்வேறு நடிகர் நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் புதிய தலைமுறை தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருந்து வந்தவர் ப்ரியாபவானி ஷங்கர் .பின்னர் “மேயாதமான்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். கடைசியாக ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும், கமலின் இந்தியன் 2 படத்திலும் கமிட் ஆகியுள்ளது ப்ரியா பவானி ஷங்கர் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் கசடதபர, குருதி ஆட்டம், ஓமனபெண்ணே, பொம்மை, ஹாஸ்டல், ருத்ரன் என்று 10கும் மேற்பட்ட படங்கள் வெளியாக இருக்கிறது. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி பதிவுகளை பதிவிடுவது வழக்கம்.

இதையும் பாருங்க : Beast டைட்டிலில் ஒளிந்திருக்கும் விஜய்யின் வயது – எப்படி தான் கண்டு புடிக்கிறாங்களோ.

- Advertisement -

அந்த வகையில் சமீபத்தில் பிரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் ஸ்பைனல் மஸ்குலர் அட்ரொபி என்ற அறிய நோயால் பாதிக்கப்பட்ட மித்ரா என்ற குழந்தையின் சிகிச்சைக்கு பல லட்சம் தேவைப்படுவதாகவும் அதற்கு உங்களால் முடிந்த நிதியுதவியை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இந்த வீடீயோவை கண்ட பலர் அந்த குழந்தையின் சிகிச்சைக்கு உதவ முன்வந்தனர். அதில் ஒரு ரசிகர் தனது சேமிப்பு பணமான 16ஆயிரத்து 500 ரூபாயை மேலும் கொஞ்சம் பணம் போட்டு 20ஆயிரம் ரூபாயாக அளிக்கிறேன் என்று கூறி இருந்தார். இதற்கு பிரியா பவானி சங்கரும் நன்றி தெரிவித்து இருந்தார். ஆனால், இந்த வீடியோவில் பிரியா பவானி சங்கர் அணிந்த ஆடையை சிலர் கேலி செய்தனர்.

-விளம்பரம்-

அதில் ஒரு சிலர் என்ன லுங்கி கட்டிடிடு இருக்கீங்க என்று கேலியான கமன்ட்களை பதிவிட்டு இருந்தனர். இதற்கு பதில் அளித்த பிரியா பவானி சங்கர், சாதாரண பதிவுகளில் உங்களை விட நான் வேடிக்கையாக பேசுவேன். இந்த வீடியோவில் எவ்வளவோ இருக்கிறது. அதை எல்லாம் விட்டுவிட்டு உங்களுக்கு என் ஆடை தான் தெரியுதா வாவ் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement