தமிழ் சினிமாவில் தளபதி என்ற அந்தஸ்துடன் உச்ச நட்சத்திரங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் விஜய் இன்று (ஜூன் 22) தனது 47வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கண்டது. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது.
இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது. ஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இதையும் பாருங்க : திருமணம், 5 வயதில் மகன் – தற்போதும் அதே அழகோடு இருக்கும் ஷாஜஹான் பட நடிகை.
இந்த படத்தின் பூஜை கடந்த மார்ச் 31 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிட்டு இருந்தது சன் பிச்சர்ஸ் நிறுவனம். இந்த படத்திற்கு ‘பீஸ்ட்’ என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்துள்ளனர். பீஸ்ட் என்றால் அசுரத்தனமான பெரிய மிருகம் என்று ஆங்கிலத்தில் அர்த்தப்படுகிறது. அதேவேளையில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒருவரை வழக்கத்தில் பீஸ்ட் என அழைத்து வருகின்றனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து ரசிகர்கள் பல தகவல்களை கட்னுபிடித்து வருகின்றனர். அந்த வகையில் ‘Beast’ என்று டைட்டிலுக்குள் விஜய்யின் வயது ஒளிந்திருக்கிறது. அதாவது A,B,C,D வரிசையில் Beast எழுத்துக்களுக்கான எண்களை சேர்த்தால் விஜய்யின் வயது 47 வருகிறதாம். அதாவது B(2) + E(5) + A(1) + S(19) + T(20) = 47 இப்படி ஒரு பார்முலாவை போட்டு விஜய்யின் வயது தெரிவித்துள்ளதாக நமது ரசிக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்