எல்கேஜி-யில் படித்த நபரை சன் டிவி சந்தித்த பிரியா பவானி சங்கர். அவர் கொண்டு வந்த பரிசை பாருங்க.

0
97614
priyabhavani

தமிழ் சினிமா உலகில் முன்னனி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நடிகையாக வலம் வந்த ப்ரியா பவானி சங்கர் தற்போது வெள்ளித்திரையில் பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார். மேயாதமான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்து உள்ளார். சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஃபியா படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தார்.

வீடியோவில் 15 நிமிடத்தில் பார்க்கவும்

- Advertisement -

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் படம் “பொம்மை”. இந்த படம் கூடிய விரைவில் திரையரங்கிற்கு வரப்போகிறது. மேலும், பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : உங்கள மாதிரி இருப்பவரை நான் பார்த்து விட்டேன்-வீடீயோவை பகிர்ந்த ரசிகர். சாந்தனுவின் ரியாக்ஷன்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சன் சிங்கர் நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவரின் பழைய ஸ்கூல் நண்பர் மணிகண்டன் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, நான் எல் கே ஜி யில் படிக்கும்போது மணிகண்டன் என்ற ஒருவர் எனக்கு ரொம்ப நல்ல நண்பர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை விட்டுப் பிரியவே மாட்டேன். நாங்கள் இருவரும் அந்த அளவிற்கு நண்பர்கள். மதிய நேரத்தில் சாப்பிட்டு முடித்தவுடன் எங்களை தூங்க சொல்வார்கள். கேல்ஸ் எல்லாம் ஒரு பக்கம்,பாய்ஸ் எல்லாம் ஒரு பக்கம் தூங்க விடுவாங்க.

அப்போது என் வீட்டில் இருந்து பெட் கொடுத்து விடுவார்கள். என்னால் மணிகண்டனை விட்டு தூங்க முடியாது. மேலும், மணிகண்டன் பாயில் தான் தூங்குவான். அப்போது நான் என் அப்பாவிடம் சொல்லி அனுமதி வாங்கி நானும் மணிகண்டனும் தூங்குவோம். அந்த குட்டி மணிகண்டனை என்னால் மறக்க முடியாது என்று கூறினார். தற்போது இவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகை பிரியா பவானி அவர்களின் நண்பர் மணிகண்டனும் பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement