உங்கள மாதிரி இருப்பவரை நான் பார்த்து விட்டேன்-வீடீயோவை பகிர்ந்த ரசிகர். சாந்தனுவின் ரியாக்ஷன்.

0
28316
shanthanu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சாந்தனு. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரும், நடிகரான பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரின் மகன் தான் சாந்தனு என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1998 ஆம் ஆண்டு பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த “வேட்டிய மடிச்சு கட்டு” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர். பின் சில ஆண்டுகள் கழித்து 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஆயிரம் விளக்கு, கண்டேன், அம்மாவின் கைப்பேசி, சித்து பிளஸ் 2, கதை திரைக்கதை வசனம் இயக்கம், வாய்மை, முப்பரிமாணம், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

இருந்தாலும் சாந்தனு அவர்களுக்கு சினிமாவில் பெரிய அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை.
நடிகர் சாந்தனு நடன திறமையை நாம் பல மேடைகளிலும், படங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பார்த்திருப்போம். சமீப காலமாகவே இவர் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும், சாந்தனு அவர்கள் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது சாந்தனு அவர்கள் தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சாந்தனு அவர்கள் கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி வருகிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : ஏர்போட்டில் பிரபாஸ் தோற்றத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள். நீங்களே பாருங்க.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர்களுடன் மாளவிகா மோகன், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ ப்ரேம், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் கல்லூரி பேராசிரியாக நடிக்கிறார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் படத்தை பிரிட்டோ தயாரித்து வருகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி போஸ்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும், மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் கண்டிப்பாக திரையரங்கிற்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றன.

-விளம்பரம்-

இந்நிலையில் சோசியல் மீடியாவில் நடிகர் சாந்தனு குறித்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அது என்னவென்றால், நடிகர் சாந்தனு போலவே ஒருத்தர் இருக்கிறார் என்று ரசிகர் ஒருவர் பகிர்ந்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பது, நடிகர் சாந்தனு மாதிரியே ஒருத்தரை பார்த்து விட்டேன். உங்கள மாதிரி இருப்பவரை நான் பார்த்து விட்டேன். இன்னும் ஆறு பேர் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லையே? என்று பதிவிட்டு இருந்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உண்மையாலுமே இது சாந்தனு இல்லையா? சாந்தனு போலவே இருக்கிறாரா? என்று பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். இதற்கு நடிகர் சாந்தனுவிடம் இருந்து என்ன ரியாக்ஷன் வர போகிறதோ? ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளார்கள்.

Advertisement