தமிழ் சினிமா உலகில் முன்னனி நடிகையாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ப்ரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடிகையாக வலம் வந்த ப்ரியா பவானி சங்கர் தற்போது வெள்ளித்திரையில் பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார். மேயாதமான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின் கடைக்குட்டி சிங்கம், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வெளிவந்த படம் தான் “மான்ஸ்டர்” ஆகிய படங்களில் நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து இயக்குனர் ராதா மோகன் அவர்கள் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் வைத்து “பொம்மை” படத்தை இயக்கி உள்ளார். மேலும், பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கடந்த சில காலமாகவே பிரியா பவானி சங்கர் ராஜவேல் என்பவரை காதலித்து வருவதாக சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தன்னுடைய காதல் குறித்தோ, காதலர் குறித்தோ பிரியா பவானி சங்கர் ஓப்பனாக தெரிவித்தது கிடையாது. இந்நிலையில் சமீபத்தில் பிரியா பவானி சங்கர் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் தொகுப்பாளர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பிறந்தநாள் வாழ்த்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து கூறுங்கள் என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பிரியா பவானி சங்கர் அவர்கள் கூறியது, பிறந்தநாள் வாழ்த்துக்கள் தான் இன்ஸ்டாகிராமில் நான் பதிவு செய்து இருந்தேன். ஆனால், அதை பெரிய விஷயமாக மாற்றி விட்டார்கள். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் எல்லா வருடமும் அவருக்காக பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறேன்.
இதையும் பாருங்க : முதன் முறையாக படு மார்டன் உடையில் ரோபோ ஷங்கர் மகள் நடத்திய போட்டோ ஷூட்.
நம்ப வாழ்க்கையில சில பேர் தான் எந்த ஒரு கண்டிஷன் இல்லாமல், அன்பு கூட திரும்ப எதிர்பார்க்காதவர்களாக இருப்பார்கள். நம்ம எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் பிடிக்கிறதுக்கு ஒருத்தரு வேணும் என்று நம் மனதில் தோன்றும். அந்த மாதிரி நபர் தான் அவர். நாங்கள் இருவரும் வெவ்வேறு வித வாழ்க்கையை தேடிப் போனாலும் எனக்கு ஒரு கஷ்டம்னா அவர் வந்து நிற்பார். இது பதினேழு, பதினெட்டு வயதில் தோன்றிய தொடங்கிய உறவு இன்னும் வரை மாறவில்லை. கண்ண மூடிட்டு எனக்காக ஒருத்தர் உயிரை கொடுப்பார்கள் என்று சொன்னார் எனக்கு எந்த சந்தேகமே இல்லை அவர் செய்வார். என் அப்பாவுக்கு அடுத்து நான் மதிக்கிறேன் என்று சொன்னால் அது அவர் தான். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அவர் என் மீது வைத்திருக்கும் அன்பு என்றும் குறையவே இல்லை.
வீடியோவில் 4 :25 நிமிடத்தில் பார்க்கவும்
இது காதல், நட்பு என்று இந்த உறவுக்கு பெயர் வைக்க முடியாது. நான் ஒரு சினிமா பிரபலம் இல்லாத காலத்திலும் எனக்கு அவரை நன்றாகத் தெரியும். என் அப்பாவிற்கு பிறகு என்னை நன்றாக பார்த்துக் கொள்ளக் கூடியவர். இந்த உறவை நான் என்றுமே மதிக்கிறேன் என்று ரொம்ப எமோஷனலாக பிரியா பவானி சங்கர் பேசியுள்ளார். தற்போது ஹரிஷ் கல்யாண் அவர்கள் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெற்றி பெற்ற ‘பெல்லி சூப்புலு’ என்ற படத்தை தமிழ் ரீமேக் செய்கிறார்கள். இந்த படத்தில் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்து வருகிறார். இந்த படத்தை கார்த்திக் சுந்தர் இயக்குகிறார். இதனை தொடர்ந்து களத்தில் சந்திப்போம், விக்ரம் 58வது படம், மாஃபியா அத்தியாயம்-1, கசடதபற, குருதி ஆட்டம் போன்ற பல படங்களில் கமிட்டாகி அம்மணி பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கிறார்.