கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்திற்கு பிரியா பவானி சங்கர் குரல் கொடுத்திருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டு இருக்கும் சம்பவம் கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தான். கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார்.
ஜூலை 13ம் தேதி அதிகாலை விடுதியில் இரண்டாவது மாடியில் இருந்து ஸ்ரீமதி மாணவி கீழே விழுந்து உயிரிழந்தார். அவர் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறப்படுகிறது. ஆனால், மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. மேலும், மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதாக பெற்றோர்கள், உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாணவியின் மரணத்தில் மர்மம்:
இதனால் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர்கள், உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகமே கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பள்ளி வாகனங்கள் எல்லாம் சூறையாடப்பட்டன. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே புரட்டிப் போட்டிருக்கிறது. மாணவியின் மரணம் தொடர்பாக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது.
போஸ்ட்மார்ட்டம் தகவல்:
மேலும், போஸ்ட்மார்ட்டம் தரப்பு தகவலின் அடிப்படையில் அந்த மாணவி இரவு 10.30 மணிக்கு இறந்திருக்கலாம் என்று தோராயமாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மாணவியின் பிரேத பரிசோதனையில் சில சந்தேகங்கள் எழுந்துள்ளது. அதாவது, மாணவியின் உடையில் மேல் உடை, கீழே பேன்ட், மேல் மற்றும் கீழ் உள்ளாடை இந்த நான்கு இடங்களிலும் தத்தம் இருந்துள்ளது. இரத்தம் எப்படி வந்தது? அது கீழே விழுந்ததால் ஏற்பட்ட ரத்தம் அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கைதான ஆசிரியர்கள்:
அதேபோல மாணவியின் பெற்றோர் பள்ளி தரப்பிடம் சிசிடிவி கேட்டதற்கு பள்ளி நிர்வாகம் கொடுக்கவில்லை என்று மாணவியின் பெற்றோர்கள் கூறியிருக்கின்றனர். போலீஸ் தரப்பு விசாரித்தது காலையில் மாணவி உடலை காவலர் தரையில் கண்டு எடுக்கும் காட்சி மட்டும் இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் ஏற்கனவே கைதான் நிலையில் தற்போது வேதியல் ஆசிரியர், கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
ப்ரியா பவானி சங்கர் பதிவு:
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பிரபலங்கள் பலரும் ஸ்ரீநிதி ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் justice for srimathi என்று பதிவிட்டு ஸ்ரீமதியின் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். தற்போது இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் தமிழ் பொண்ணு தமிழ் பொண்ணு தான். அதை பிரியா பவானி சங்கர் நிரூபித்து விட்டார் என்று பாராட்டி பலரும் பதிவு போட்டு வருகிறார்கள்.
ப்ரியா பவானி சங்கர் திரைப்பயணம்:
தமிழ் சினிமா உலகில் முன்னனி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருந்தார். அதன் மூலம் இவர் சீரியலில் நடித்தார். சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. அதன் பின் இவருக்கு பட வாய்ப்புகள் வந்தது. தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.