இந்தியன் 2வில் தனது பர்பாமென்ஸை கேலி செய்து வைரலான மீம்ஸ் – ப்ரியா பவானி சங்கர் கொடுத்த பதிலடி

0
233
- Advertisement -

இந்தியன் 2 வில் பிரியா பவானி சங்கர் நடனமாடி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான கமலஹாசன் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் 2. இயக்கியிருக்கிறார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை மீண்டும் இயக்குனர் சங்கர்-கமல் எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் சித்தார்த், ராகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, ஜெகன், பாபி சிம்ஹா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இந்தியன் படத்துக்கு கிடைத்த வரவேற்பு இந்தியன் 2விற்கு கிடைக்கவில்லை என்றுதான் சொல்லணும். அதோடு சங்கர் திரைப்பயணத்திலேயே இந்த தான் படம் பெரும் தோல்வி என்று கூறப்படுகிறது.மேலும், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.

- Advertisement -

பிரியா பவானி சங்கர் பதிவு:

இந்நிலையில் பிரியா பவானி சங்கர் உடைய நடன வீடியோவை தான் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். அதாவது, இந்தியன் 2 படத்தில் இடம்பெற்ற கதரல்ஸ் என்ற பாட்டுக்கு ப்ரியா பவானி சங்கர் நடனமாடி இருக்கிறார். அந்த நடன வீடியோவை தான் நெட்டிசன்கள் பதிவிட்டு கிண்டல் அடித்தும் மீம்ஸ் தெறிக்க விட்டும் வருகிறார்கள். இதை பார்த்த பிரியா பவானி சங்கர், அடப்பாவிங்களா? இட்ஸ் ஜஸ்ட் PBSன் கதரல்ஸ் என்று வேடிக்கையாக பதில் அளித்திருக்கிறார்.

பிரியா பவானி சங்கர் குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் முன்னனி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ப்ரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதன் மூலம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. அதோடு இதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது.

-விளம்பரம்-

பிரியா பவானி சங்கர் நடித்த படங்கள்:

நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாதமான் என்ற படத்தின் மூலம் தான் ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின் இவர் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து மிக பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே, யானை, குருதி ஆட்டம், ருத்ரன், திருச்சிற்றம்பலம் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் இவள் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

பிரியா பவானி சங்கர் நடக்கும் படங்கள்:

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ரத்தினம் படத்தில் ஹீரோவாக விஷால் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை அடுத்து தற்போது இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் இந்தியன் 2. இதைத் தொடர்ந்து பிரியா பவானி சங்கர் அவர்கள் டிமான்டி காலனி-2, இந்தியன் 3, தெலுங்கு மொழியில் ஒரு படம் என பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

Advertisement