ஒருவரை காதலித்து பின்னர் பிரிந்து விட்டேன். பிரியா வாரியரின் லவ் ஸ்டோரிய கேளுங்க.

0
3214
Priya-Varrier
- Advertisement -

ஒரே ஒரு கண் சிமிட்டல் வீடியோ மூலம் உலகளவில் பிரபலமடைந்தவர் மலையாள இளம் நடிகை பிரியா வாரியார். மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ஒரு ஆதர் லவ் என்ற ஒரே ஒரு படத்தின்பிரபலமடைந்தவ நடிகை ப்ரியா வாரீர் அதன் பின்னர் சமூக வலைதளத்தில் அதிகம் தேடப்பட்ட நபராகவும் இருந்து வந்தார். மேலும், சமூக வலைதளத்தில் இவருக்கு கிடைத்த பிரபலத்தின் மூலம் இவருக்கு இந்தியில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது பலருக்கும் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-
Image result for priya varrier  ex boyfriend

- Advertisement -

பல்வேறு தென்னிந்திய நடிகைகள் பல ஆண்டுகளாக இந்தி படத்தின் வாய்ப்பிற்காக காத்துகொண்டு இருக்கும் நிலையில் தனது இரண்டாவது படத்திலேயே இந்தி சினிமாவில் நடித்தார் பிரியா வாரியார். தற்போது ஸ்ரீதேவி பங்களா என்ற புதிய இந்தி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்ரீதேவியின் வாழக்கை வரலாற்றில் நடிக்கும் பிரியா வாரீயர் அந்த ட்ரைலரில் மது பிடித்தல், குறைவான அடையில் நடித்தல் போன்ற காட்சிகள் இடம்பெற்றது.

இதையும் பாருங்க : அதை நினைத்து இப்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. வரலஷ்மியிடம் மன்னிப்பு கேட்ட சரத்குமார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா வாரியார், தனது முன்னாள் காதலர் குறித்து பேசியுள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர், நான் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்தபோது, ஒரு பையன் வந்து என்னிடம் காதலை சொன்னான். அவனுடைய காதலை ஏற்று நானும் அவனை காதலித்தேன். அது ஒரு இன ஈர்ப்பு என்பதை பின்னர் இருவருமே புரிந்து கொண்டோம். அதன்பிறகு இரண்டு பேரும் பேசி பிரிந்து விட்டோம்.தற்போது படிப்பிலும், நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Image result for priya varrier interview

இது ஒருபுறம் இருக்க நடிகை பிரியா வாரியர் தற்போது நடித்துள்ள ஸ்ரீதேவி பங்களா திரைப்படம் பிரச்னையில் இருந்து வருகிறது. அந்த படத்தின் ட்ரைலரில் ஸ்ரீதேவி குளியல் தொட்டியில்இறந்துகிடப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றது. ப்ரியா வாரீயர் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிப்பதை பலரும் எதிர்த்து வந்தனர். மேலும், இந்த படத்தில் தேவையில்லாத காட்சிகளை நீக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி கணவர் போனி கபூரும் வழக்கு தொடர போவதாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement