முதன் முறையாக பாலியல் தொல்லை குறித்து அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ப்ரியா பவானி ஷங்கர்.!

0
763
priya-bhavani-shankar
- Advertisement -

சினிமா துறையில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக தெலுங்கு நடிகை தனது முக நூல் பக்கத்தில் குற்றம் சட்டி இருந்தார். சினிமா துறையில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து வைத்து வந்த குற்றச்சாட்டிற்கு பிறகு பல்வேறு நடிகர் நடிகைகளும் இதுகுறித்து தனது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

Priya_Bhavani_Shankar

- Advertisement -

இந்நிலையில் பிரபல நடிகை ப்ரியா பாவனிசங்கர் சினிமா துறை மட்டுமல்ல மற்ற எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாலியில் தொல்லைகள் இருந்து வருவதாக வெளிப்படையான ஒரு கருத்தை கூறியுள்ளார். தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சீரியலில் பெயர் பெற்று தன் நடிப்பு திறமையால் தற்போது சினிமாவில் கலக்கி வருகிறார் நடிகை ப்ரியா பாவனிசங்கர்.

சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற நடிகை ப்ரியா பாவனிசங்கர் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் குறித்து தெரிவிக்கையில்’ சினிமாத்துறையில் மட்டும் தான் பாலியல் தொல்லை இருப்பதாக பலரும் குறிவருகின்ற்றனர். என்னை பொறுத்த வரை எல்லா துறையிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருக்கத்தான் செய்கிறது.

-விளம்பரம்-

priya bhavani shankar

சினிமா துறை மட்டுமல்ல பள்ளி, கல்லூரி, தனியார்துறை, என பல துறைகளில் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருந்துதான் வருகின்றனது. இதில் சிலர் தவறு செய்து விட்டு , தாங்கள் தவறு செய்து விட்டதாக வெளியே சொல்கின்றனர். இதையெல்லாம் அவரகள் யோசித்து பார்க்க வேண்டும்’ என்று தெரிவித்துளளார்.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் சுசி லீக்ஸ் சர்ச்சையின் போது அது குறித்து கருத்து தெரிவித்திருந்த ப்ரியா பவனி ஷங்கர் “அது பலரது வாழ்க்கையை பாதித்துவிட்டது. அந்த விஷயத்தால் நிறைய பிரச்சனைகள் உருவானது. இது போன்ற பிரச்னைகள் இனிமேலும் வராமல் இருப்பது நல்லது.”என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement