38 ஆண்டுகள் கழித்து தன்னை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்த பாக்கியராஜை சந்தித்த நடிகை. அட, இவங்க தானா அது.

0
511
divya
- Advertisement -

38 ஆண்டுகள் கழித்து பாக்கியராஜை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார் தாவணி கனவுகள் குழந்தை நட்சத்திரம். நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் பல வெற்றி படங்கள் வந்துள்ளது. அவரது வெற்றிப்பட வருசையில் 1984 இல் வெளியான தாவனிக்கணவுகள் என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.4 தங்கைகளை கொண்ட ஒரு அண்ணன் அவர்களை எப்படி வாழ்க்கையில் கரைசேர்கிறார் என்ற கதையாக அந்த படத்தை அமைத்திருந்தார் பாக்யராஜ்.

-விளம்பரம்-

இந்த படத்தில் தான் பாக்யராஜின் உதவியாளராக இருந்த நடிகர் பார்த்திபனும் போஸ்ட் மாஸ்டராக நடித்திருப்பார்.இந்த படத்தில் கடைசி தங்கையாக ஒரு சிறுமி நடித்திருப்பார். இவர் படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் நல்லா காமெடியாக அமைந்தது.அந்த சிறுமி வேறு யாரும் இல்லை பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி டிடி-யின் அக்கா ப்ரியதர்ஷினி தான். தமிழில் இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.

- Advertisement -

இவர் இதய கோயில்’ மற்றும் மலையாளத்தில் ‘சுப யாத்ரா’ ஆகிய மூன்று படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தமிழில் ரகுமானின் ‘கல்கி’ என்ற படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்திருந்தார் ப்ரியதர்ஷினி.அதன் பிறகு ‘ஜித்தன்’ ரமேஷின் ‘புலி வருது’, பரத்தின் ‘காளிதாஸ்’ ஆகிய இரண்டு தமிழ் படங்களிலும் நடித்தார். இதில் ‘காளிதாஸ்’ படத்தினை அறிமுக இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் ப்ரியதர்ஷினி மிக முக்கிய ரோலில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. திரைப்படங்கள் மட்டுமின்றி ‘அக்னிப் பரீட்சை, எத்தனை மனிதர்கள், விழுதுகள், கனவுகள் இலவசம், கோலங்கள், வசந்தம், மை டியர் பூதம், ரேகா IPS, தமிழ் கடவுள் முருகன்’ என பல டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார் ப்ரியதர்ஷினி.தற்போது, ‘ஹாட் & கூல் மீடியா’ என்ற யூ-டியூப் சேனலில் தொடர்ந்து திரைப்படங்களை விமர்சனம் செய்து வருகிறார் ப்ரியதர்ஷினி.

-விளம்பரம்-

தொடர்ந்து நடித்து வந்த பிரியதர்ஷினி, ரமணா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ரிஷி என்ற மகனும் இருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் நடிப்பில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டார் பிரியதர்ஷினி. தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சின்னத்திரை பக்கம் வந்துள்ளார். சிங்கப் பெண்ணே என்ற புதிய சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்த இவர் எதிர் நீச்சல் தொடரிலும் நடித்து வருகிறார்.

Advertisement