பிரபல தமிழ் பட இயக்குனரிடம் ஷூட்டிங்கில் அடி வாங்கியுள்ள பிரியாமணி – அவரே கூறிய அதிர்ச்சி தகவல்

0
767
priyamani
- Advertisement -

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை பிரியாமணி. இவர் தெலுங்கு திரையுலகில் 2002-ஆம் ஆண்டு வெளி வந்த ‘எவரே அதகாடு ’ என்ற படத்தில் நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தினை பி. பானு ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக வல்லபா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக தான் ப்ரியாமணி நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ப்ரித்விராஜின் ‘சத்யம்’ என்ற மலையாள படத்தில் நடித்தார் ப்ரியாமணி. அதன் பிறகு தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் ப்ரியாமணி நடித்து பிரபலமான நடிகை ஆனார். அடுத்ததாக ப்ரியாமணி தமிழ் திரையுலகிலும் நுழையலாம் என முடிவெடுத்தார்.

-விளம்பரம்-

பின் 2004-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பிரியாமணி. இந்த படத்தினை பிரபல இயக்குநர் பாரதிராஜா இயக்கியிருந்தார். இதில் கதாநாயகனாக வசீகரன் என்பவர் நடித்திருந்தார். இந்த ‘கண்களால் கைது செய்’ படத்துக்கு பிறகு அது ஒரு கனாக்காலம், மது, பருத்தி வீரன், மலைக்கோட்டை, தோட்டா, மது, நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா’ என அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார் ப்ரியாமணி.

- Advertisement -

ப்ரியாமணி நடித்த படங்கள்:

இருந்தாலும் இவர் பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்திற்காக பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. பின் பிரியாமணி அவர்கள் தெலுங்கு, மலையாளம், தமிழ், ஹிந்தி, கன்னடம் ஆகிய பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் இவர் ஹிந்தி திரையுலகில் 2013-ஆம் ஆண்டு வெளி வந்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திலும் நடித்து இருந்தார். இந்த படத்தினை பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கியிருந்தார்.

ப்ரியாமணி திரை பயணம்:

இதில் ஹீரோவாக பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் இடம்பெற்ற ‘1 2 3 4 கெட் ஆன் தி டான்ஸ் ஃப்ளோர்’ என்ற பாடலில் ப்ரியாமணி நடனம் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் பிரியாமணி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்திருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை ப்ரியாமணி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் ப்ரியாமணி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

-விளம்பரம்-

ப்ரியாமணி அளித்த பேட்டி:

அதுமட்டுமில்லாமல் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தான் எடுக்கும் புகைப்படம், வீடியோக்களை பகிர்ந்து வருவார். இந்த நிலையில் சமீபத்தில் பிரியாமணி அவர்கள் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் தன்னுடைய அறிமுகப் படமான கண்களால் கைது செய் படம் குறித்தும், இயக்குனர் பாரதிராஜா குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் நடித்த முதல் படம் கண்களால் கைது செய். இந்த படத்தை இயக்குனர் பாரதிராஜா இயக்கி இருந்தார்.

பாரதிராஜா உடன் நடித்த அனுபவம்:

ஆரம்பத்தில் நான் இந்த படத்தில் நடிக்க ரொம்பவே பயந்தேன். பாரதிராஜா முன்கோபக்காரர். அவருக்கு ரொம்ப சீக்கிரமாகவே கோபம் வந்திடும். ஏன்னா, அவருடைய திரைப்படம் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். பெரிய நடிகையாக உள்ள ராதிகா, ராதா உட்பட பல நடிகைகளும் அவரிடம் அடி வாங்கி இருக்கிறார்கள். அதோடு அவர் அடித்தால் அதிஷ்டம் என்று சொல்லுவார்கள். ஆனால், நான் அடி வாங்க கூடாது என நினைத்தேன். அதிர்ஷ்டவசமாக என்னையும் அவர் அடித்துள்ளார் என்று கூறியிருக்கிறார். இப்படி பிரியாமணி கூறிய கருத்து தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement