கோவிலில் யானை வளர்ப்பதை தடுக்க, பீடா அமைப்புடன் சேர்ந்து பிரியா மணி செய்த மாஸ்டர் பிளான். இத்தனை லட்சம் செலவு

0
441
- Advertisement -

பீட்டா அமைப்புடன் பிரியாமணி கூட்டணி வைத்து செய்திருக்கும் செயல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரியாமணி. இவர் தெலுங்கு திரையுலகில் 2002-ஆம் ஆண்டு வெளி வந்த ‘எவரே அதகாடு ’ படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் ப்ரித்விராஜின் ‘சத்யம்’ என்ற மலையாள படத்தில் நடித்தார்.

-விளம்பரம்-

பின் இவர் தமிழில் வெளி வந்த ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்துக்கு பிறகு இவர் அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார். இருந்தாலும், இவர் பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்திற்காக பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. மேலும் பிரியாமணி அவர்கள் மலையாளம், தமிழ், ஹிந்தி, கன்னடம் ஆகிய பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

ப்ரியாமணி திருமணம்:

பின் இடையில் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் பிரியாமணி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்திருந்தார். அதன் பின் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் ப்ரியாமணி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று இருந்தார். பின் இவர் வெப்சீரிஸ், சினிமாக்களில் முழுவீச்சில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஃபேமிலி மேன் என்ற திரைப்படத்தில் பிரியாமணி நடித்திருந்தார்.

ப்ரியாமணி நடிக்கும் படங்கள்:

கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியிருந்த ஜவான் படத்தில் பிரியாமணி நடித்திருந்தார். இதனை அடுத்து கடந்த மாதம் ஹிந்தியில் இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த படம் ஆர்டிகள் 370. இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது இவர் மைதான், கன்னடத்தில் கைமாரா, தமிழில் கொட்டேஷன் கேம்ஸ் போன்ற பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்த நிலையில் பீட்டா அமைப்புடன் ப்ரியாமணி செய்திருக்கும் செயல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

பீட்டா அமைப்பு-ப்ரியாமணி கூட்டணி:

கோவில்களில் யானைகளை துன்புறுத்துவதை தடுக்கும் விதமாக இயந்திர யானைகளை கோவில்களில் பயன்படுத்தும் புதிய சட்டத்தை பீட்டா அமைப்பு உருவாக்கியிருக்கிறது. இதனால் பல இடங்களில் இயந்திர யானையை உருவாக்கி பயன்படுத்தினார்கள். இந்த நடவடிக்கையில் பீட்டா அமைப்புடன் ப்ரியாமணி கைகோர்த்து இருக்கிறார். அந்த வகையில் கேரளா கொச்சி அருகே உள்ள திருக்கயில் மகாதேவா கோயிலுக்கு பிரியாமணி அவர்கள் பீட்டா அமைப்புடன் சேர்ந்து இயந்திர யானையை பரிசாக கொடுத்திருக்கிறார்.

ப்ரியாமணி அளித்த பேட்டி:

மேலும், இந்த கோவிலில் யானைகளை சொந்தமாகவோ, வாடைக்கு எடுக்கவோ கூடாது என்ற என்ற கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். இதனால் இந்த இயந்திர யானைக்கு மகாதேவன் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இது கேரளாவில் இரண்டாவதாக அறிமுகப்படுத்த இயந்திர யானை. இது குறித்து பிரியாமணி, தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் என்பது விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும். இதை உறுதி செய்வதன் மூலம் நம்முடைய வளமான கலாச்சார நடைமுறைகளையும் பாரம்பரியத்தையும் பராமரிக்க முடியும் என்று கூறியிருக்கிறார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் பிரியாமணியின் செயலை பாராட்டி வருகிறார்கள்.

Advertisement