பீச் விசிட் அடித்த ரோஜா – ரோஜாவின் செருப்பை எடுத்து வந்த ஊழியர். வீடியோவை கண்டு விளாசும் நெட்டிசன்கள்.

0
574
roja
- Advertisement -

தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1992 ஆம் மாவட்டத்தை வெளி வந்து இருந்த “செம்பருத்தி” என்ற படத்தின் மூலம் தான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.அதனை தொடர்ந்து இவர் சூரியன், உழைப்பாளி, அதிரடி படை, வீரா, அசுரன் மக்கள், ஆட்சி ராஜாலி, அடிமை சங்கிலி, என் ஆசை ராசாவே, ஊட்டி போன்ற என் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு என்று பல நடிகர்களின் படங்களில் நடித்து இருந்தார். அதே போல இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்து இருந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் ரோஜா சின்னத்திரை நிகழ்ச்சிகள், குணச்சித்திர வேடங்களில் நடித்து இருந்தார்.

- Advertisement -

பின் சில ஆண்டு காலாகவே ரோஜா பின் நிறுத்தி விட்டு அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வந்தார். தற்போது இவர் ஆந்திராவில் நகரி எம்எல்ஏ வாக இருக்கிறார். அதோடு ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதில் ரோஜாவுக்கு பங்கு உண்டு. மேலும், ஜெகன்மோகன் அமைச்சரவையில் ரோஜாவுக்கு இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,ரோஜாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இருந்தும் ரோஜா அப்பகுதியில் பம்பரமாக சுற்றி இருந்தும் வருகிறார். கொரோனா சமயத்தில் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு ஒரு எம் எல் ஏ வாக பல உதவிகள் செய்து இருந்தார் ரோஜா. அந்த பகுதி மக்களின் கல்வி, மருத்துவ உதவி என பல விஷயங்களை செய்து அசத்தி இருக்கிறார் ரோஜா. இதனிடையே இவர் கடந்த 2002 ஆம் தமிழ் சினிமா உலகில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான ஆர்.கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு திருமணம் மற்றும் மகள் இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில், ரோஜா நேற்று ஆந்திர மாநிலத்தில் உள்ள பாபட்லா சூர்யலங்கா கடற்கரையை பார்வை இடுவதற்காக சென்றியிருந்தார். இப்போது, கடற்கரையில் மணலில் இறங்கி நடக்கத் தொடங்கிய ரோஜா, திடீரென தண்ணீரில் இறங்கினார். அப்போது ரோஜா அணிந்து வந்த செருப்பை அவரது ஊழியர் கையில் வைத்து இருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாகி உள்ளது.

இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், அமைச்சர் என்பதற்காக ஊழியரை செருப்பை எடுக்க வைப்பது எல்லாம் ரொம்ப ஓவர் என்றும், சக மனிதனைக்கூட ரோஜாவுக்கு மதிக்க தெரியவில்லை என்று நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். சமீபத்தில் தான் ரோஜா மகளின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து விஷமிகள் சிலர் சமூக வலைத்தளத்தில் பரப்பிவிட்டனர். அதே சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement