7 பெட்ரூம், 18 கழிவறை. அமெரிக்காவில் பிரியங்கா சோப்ரா வாங்கிய வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா ?

0
122271
Priyanka-Chopra
- Advertisement -

உலக அழகி பிரியங்கா சோப்ராவை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மேலும், இவர் இந்திய திரைப்பட நடிகையும் ஆவார். இவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன்னர் மாடலாக பணியாற்றினார். இதனைத்தொடர்ந்து நடிகை பிரியங்கா சோப்ரா அவர்கள் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகமானார். அதற்கு பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவே இல்லை. மேலும்,அவர் பாலிவுட் திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அதோடு நடிகை பிரியங்கா சோப்ரா அவர்கள் பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் படங்களில் நடித்து உள்ளார். இதனைத்தொடர்ந்து ஆன்லைனில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

-விளம்பரம்-

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் நடிகை பிரியங்கா சோப்ராவை சமூக வலைத்தளங்களில் ‘சர்ச்சை நாயகி’ என்று கூட சொல்லலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு சமூக வலைத்தளங்களில் அவரை குறித்துப் பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது நடிகை பிரியங்கா சோப்ரா அவர்கள் அமெரிக்காவில் 144 கோடி ரூபாய்க்கு ஒரு புதிய வீடு ஒன்றை வாங்கி உள்ளார் எனத் தகவல் வந்துள்ளது. அனைவரும் ‘அடேங்கப்பா’ என்று வாயை பிளக்கும் அளவிற்கு வீட்டின் விலை உள்ளது. அதுமட்டும் இல்லாமல் பிரியங்கா சோப்ரா குறித்து இணையங்களில் வரும் செய்திகளில் இது தான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

இதையும் பாருங்க : நல திட்ட உதவி என்ற பெயரில் மாணவிகளுக்கு விஜய் ரசிகர்கள் கொடுத்த பரிசால் கடுப்பான பெற்றோர்கள்.

மேலும், நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இதனாலேயே பிரியங்கா சோப்ரா பெரும்பாலும் அமெரிக்காவில் தான் இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர்களுடைய முதலாம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம் சில வாரங்களில் வர உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் சான்பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் பிரம்மாண்டமான வீடு ஒன்றை பிரியங்கா சோப்ரா வாங்கி உள்ளார். மேலும்,இந்த வீடு 20,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டது ஆகும்.

-விளம்பரம்-

அதோடு இந்த வீட்டை 20 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 144 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளார் பிரியங்கா சோப்ரா. மேலும்,இந்த ஆடம்பர வீட்டில் 7 படுக்கையறைகள், 11 குளியலறைகள், 18 கழிவறைகள் உள்ளன என்ற தகவல் வந்து உள்ளது. அதோடு இதைக் கேட்டவுடன் தலையே சுற்றிவிட்டது. அந்த அளவிற்கு வீட்டின் விலையும் வீட்டின் பிரமாண்டமும் உள்ளது. அது மட்டுமில்லாமல் வீட்டிற்குள்ளேயே நீச்சல் குளம், பொழுதுபோக்கிற்கான பவுலிங் அரங்கம், சினிமா தியேட்டர், பார் மற்றும் ரெஸ்டாரன்ட், கூடைப்பந்து விளையாடுவதற்கான உள்ளரங்கம், உடற்பயிற்சி மையம் என சகல வசதிகளும் அமைக்கப்பட்ட வீடாக இருந்தது.

Priyanka-Nick-Beverly-home

மேலும், பிரியங்கா சோப்ராவை திருமணம் செய்த போது நீக் 6.5 மில்லியன் டாலர் விலையில் இருந்த வீடு ஒன்றை வாங்கி இருந்தார். அந்த வீட்டை தற்போது 6.9 மில்லியன் டாலருக்கு அவர் விட்டு விட்டார். அதற்கு பதிலாக தான் பிரியங்கா சோப்ரா இந்த வீட்டை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு ஏற்கனவே நிக் 3 கோடி ரூபாய் அளவிற்கு ஆடம்பர சொகுசு காரை பிரியங்கா சோப்ராவுக்கு பரிசாக அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement