நல திட்ட உதவி என்ற பெயரில் மாணவிகளுக்கு விஜய் ரசிகர்கள் கொடுத்த பரிசால் கடுப்பான பெற்றோர்கள்.

0
10724
vijay-fans
- Advertisement -

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக இந்த திரைப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை இந்த திரைப்படம் செய்துள்ளது.

-விளம்பரம்-
vijay-fans-gave-welfare-assistance-in-melur-government-high-school

- Advertisement -

அதேபோல வெயில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் தனது படத்திற்காக செலவு செய்யும் பணத்தில் ஏதாவது நலத்திட்டங்களை செய்யுமாறு தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். அதனை பின்பற்றி வரும் ரசிகர்கள் பேனர் மற்றும் போஸ்டர் வைக்கும் பணத்தை வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டம் மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விஜய் ரசிகர்கள் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு கலந்துகொண்டிருந்தார்.

இதையும் பாருங்க : அந்த இயக்குனர் என்னை ஏமாற்றிவிட்டார். 20 ஆண்டு ரகசியத்தை தற்போது உடைத்த மந்தரா.

இந்த நிகழ்ச்சியின் போது பள்ளியில் படிப்பு, விளையாட்டு என்று சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்களை விஜய் ரசிகர்கள் சார்பாக கொடுத்தனர். ஆனால், அதற்கு முன்னதாக விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் ஸ்டிக்கர்கள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனால் கோபமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் படத்தின் ஸ்டிக்கர்களை மாணவர்களுக்கு அளிக்க எப்படி ஆசிரியர்கள் அனுமதிக்கலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நலத்திட்ட உதவிகளை செய்து வந்த விஜய் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இந்த சம்பவம் கொஞ்சம் பரபரப்பாக ஆகிவிட, இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி மீனாவின் பார்வைக்கு சென்றது. இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய அவர் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் இது குறித்து விசாரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். நலத்திட்ட உதவி செய்யப் போன இடத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் ஏற்பட்ட பிரச்சனையால் வெளியே ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Advertisement