ஷாருக்கானை திருமணம் செய்ய நோ சொன்ன பிரியங்கா சோப்ரா, உலக அழகி போட்டியில் நடந்த சம்பவம்- வைரல் வீடியோ இதோ

0
321
- Advertisement -

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிடம், மிஸ் இந்தியா போட்டியின் போது ஷாருகான் கேட்ட கேள்விதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுடில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய நடிகை மட்டும் இல்லாமல் முன்னாள் உலக அழகியும் ஆவார். இவர் மாடலாக தன்னுடைய கேரியரை தொடங்கினார். பின் பல விளம்பரங்களில் நடித்து வந்தார். பிறகு 2000 ஆம் ஆண்டில் மிஸ் இந்தியா அழகி போட்டியில் பங்கு பெற்று, முதல் ரன்னர் அப் கிரீடத்தையும், அதை தொடர்ந்து மிஸ் வேர்ல்ட் கிரீடத்தையும் வென்றார் பிரியங்கா சோப்ரா.

-விளம்பரம்-

மேலும் அழகிப் போட்டிகளில், போட்டியாளர்களிடம் கடினமான கேள்விகள் கேட்கப்படும் என்பது நாம் அறிந்தவையே. அந்த கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளிப்பது முக்கியமானதாகவும் போட்டிகளில் கருதப்படும். அந்த வகையில் தான் பங்கு பெற்ற இரண்டு போட்டிகளிலுமே தன்னுடைய திறமையான பதிலால் நடுவர்களை அசர வைத்தவர் பிரியங்கா சோப்ரா. அந்த வகையில் மிஸ் இந்தியா அழகி போட்டியின் போது நடுவர்களில் ஒருவராக இடம்பெற்றவர் பாலிவுட் பாட்ஷா நடிகர் ஷாருக்கான் ஆகும்.
அந்த வகையில் போட்டியாளரான பிரியங்கா சோப்ராவிடம் கேள்வி கேட்கும் வாய்ப்பு ஷாருகானுக்கு கிடைத்தது.

- Advertisement -

ஷாருக்கானின் கேள்வி:

அப்போது அவர் பிரியங்காவிடம், ‘ நானும் உங்களை மாதிரி தான் பதட்டமாக இருக்கிறேன். நீங்கள் திருமணம் செய்து கொண்டால் பின்வரும் ஆப்ஷன்களில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள்? என்று கேட்டு ஆப்ஷன்களையும் சொன்னார். அசார் பாய் போன்ற ஒரு விளையாட்டு வீரரையா? – அவர் உங்களை உலகம் முழுவதும் அழைத்துச் சென்று, உங்களையும் உங்கள் நாட்டையும் பெருமைப்படுத்துவார்.

ஷாருக்கான் கொடுத்த ஆப்ஷன்ஸ்:

அதனைத் தொடர்ந்து ஷாருக்கான், ஸ்வரோவ்ஸ்கி போன்ற உச்சரிக்க கடினமான பெயரைக் கொண்ட ஒரு கலைநயம் கொண்ட தொழிலதிபரையா? – அவர் உங்களை நகைகள் மற்றும் நேர்த்தியான நெக்லஸ் களால் அலங்கரிப்பார். அல்லது என்னைப் போல் ஒரு பாலிவுட் நடிகரையா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், அவர் இது ஒரு கற்பனை திருமணம் குறித்த சிக்கலான கேள்வி என்றாலும், அதற்கு பதில் அளிப்பதை தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை என்றார் ஷாருக்கான்.

-விளம்பரம்-

திருமணம் குறித்த கேள்வி:

பின் நீங்கள் பதில் அளிப்பதற்கு முன்பு நான் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். உங்களின் பதில் எதுவாக இருந்தாலும் அது உங்களின் மதிப்பெண்களை பாதிக்காது என்றும், உங்களின் பதிலால் அசார் வாய் மற்றும் ஸ்வரோவ்ஸ்கி கவலைப்பட மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்’ என்று குதர்க்கமாக நீண்ட கேள்வியை பிரியங்காவிடம் முன் வைத்தார் ஷாருக். இந்த கேள்விக்கு மிகவும் நிதானமாகவும் புத்திசாலித்தனமாகவும் பிரியங்கா சோப்ரா பதிலளித்துள்ளார்.

பிரியங்கா சோப்ராவின் பதில்:

பதிலில், ‘ இந்த மூன்று பேரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் நான் இந்திய விளையாட்டு வீரரை தான் தேர்வு செய்வேன். ஏனென்றால், அவர் வீடு திரும்பும்போது இந்தியாவைப் போலவே நானும் அவரை நினைத்து பெருமைப்படுகிறேன் என சொல்லி ஆதரவாக இருப்பேன். அவரைப் பார்த்து உன்னால் முடிந்ததை சிறப்பாக செய், நீ நிச்சயம் வலிமை வாய்ந்தவன் என சொல்வேன். என் நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய வலிமையான என்னுடைய கணவனை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுவேன். மிக்க நன்றி’ என பதில் அளித்திருந்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

Advertisement