பிரியங்கா சோப்ராவுக்கு அவருடைய கணவர் நிக் ஜோனஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய நடிகை மட்டுமில்லாமல் முன்னாள் உலக அழகியும் ஆவார். இவர் மாடலாக தன்னுடைய கேரியரை தொடங்கினார். பின் பல விளம்பரங்களில் நடித்து இருந்தார். பிறகு 2000 ஆண்டில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் பங்குபெற்று வெற்றியும் பெற்று மிகப் பிரபலமாகி இருந்தார் பிரியங்கா சோப்ரா. மேலும், இவர் 2002 ஆண்டு மஜீத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகி இருந்தார்.
அதனை தொடர்ந்து இவர் ஹிந்தியில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தமிழன் படத்திற்கு பிறகு பிரியங்கா சோப்ரா பாலிவுட்டிலேயே தங்கிவிட்டார். தற்போது பிரியங்கா சோப்ரா அவர்கள் ஹாலிவுட், பாலிவுட், வெப் சீரிஸ் என பிஸியாக நடித்து உலக அளவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இதனிடையே பிரியங்கா சோப்ரா அவர்கள் நிக் ஜோனாஸ் என்பவரை காதலித்து இருந்தார்.
இதையும் பாருங்க : என்ன சிம்புவுடன் சேர்த்து வைங்க, அவர தவிர யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன் – சிம்பு வீட்டிற்கு முன் இரவில் காத்திருந்த சீரியல் நடிகை.
பிரியங்கா-நிக் ஜோனாஸ் திருமணம்:
பின் இவர்கள் இருவரும் 2018 ஆம் ஆண்டு ஜோத்பூர் அரண்மனையில் கிறிஸ்தவ முறைப்படியும், இந்து மத சடங்குகளின் படியும் திருமணம் செய்து கொண்டார்கள். பிரியங்கா சோப்ரா இந்துமதத்தையும், நிக் ஜோனாஸ் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்களின் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்று இருந்தது. மேலும், திருமணத்தில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். அதோடு பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனஸ் 10 வயது சிறியவர்.
பிரியங்கா சோப்ரா நடிக்கும் படங்கள்:
இதனால் இவர்களின் திருமணம் குறித்து பலரால் பலவிதமாக பேசப்பட்டு இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் தான் வாடகை தாய் மூலம் பெண் குழந்தையை பெற்று இருந்தார் பிரியங்கா சோப்ரா. சமீபத்தில் தன் மகளுக்கு மால்டி மேரி என பெயர் வைத்தார். பின் முதன் முறையாக தன் மகளின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் பிரியங்கா சோப்ரா. இருந்தாலும் பிரியங்கா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ‘The Matrix Resurrections’ என்ற படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். அதோடு It’s All Coming Back to Me மற்றும் Jee Le Zaraa ஆகிய படங்களில் பிரியங்கா நடிக்க இருக்கிறார்.
நிக் ஜோனஸ் சர்ப்ரைஸ் கிஃப்ட்:
தற்போது இவர் ‘Citadel’ என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இது ஒரு வெப்சீரிஸ். சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் இந்த வெப்சீரிஸ் உருவாகிவருகிறது. இதில் ஹீரோவாக ‘எடர்னல்ஸ்’ பட ஹீரோ ரிச்சர்ட் மேடன் நடித்து வருகிறார். தற்போது சூட்டிங் பயங்கரமாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் பிரியங்காவுக்கு அவரது கணவர் நிக் ஜோனஸ் சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா சோப்ரா பதிவிட்டு கூறியிருப்பது,
இன்ஸ்டாவில் பிரியங்கா போட்ட பதிவு:
இதுதான் ஒரு தரமான ரைட், நன்றி நிக் ஜோனஸ். எப்போதும் எனக்கு உதவி செய்து கொண்டிருப்பதற்கு என்று பதிவிட்டு சிறந்த கணவர் என்கிற ஹோஸ்டேக் பதிவிட்டு அந்த காரை ஓட்டுவது போல புகைப்படம் ஒன்றையும் பிரியங்கா சோப்ரா பதிவிட்டிருக்கிறார். மேலும், அந்த காரின் பக்கவாட்டில் Mrs.Jonas என்று எழுதப்பட்டிருக்கிறது. நிக் ஜோனஸ் ஒரு காரை தான் பிரியங்கா சோப்ராவுக்கு பரிசளித்திருக்கிறார். கடற்கரை மணல், ஆன் ரோடு,சகதி இப்படியெல்லாம் நிலப்பரப்புகளும் ஓட்டக்கூடிய All Terrain Vehicle மாடல் காரை பரிசளித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.