பிரபல நடிகை வித்யா பாலனுக்கு தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே நன்றி தெரிவிக்கும் வகையில் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது பிரியங்காவுக்கு தான். இவர் வாயாடி தொகுப்பாளினி என்றுபெயர் எடுத்தவர். இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது. அதிலும் இவரின் பிரபலமே சிரிப்பு தான்.
View this post on Instagram
இதனாலேயே இவர் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் வழங்கி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். பின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார். பின் இவர் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.
தொகுப்பாளர் பிரியங்கா குறித்த தகவல் :
இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மிகத் திறமையாக விளையாடி வந்தார். பல பிரச்சனைகளில் பிரியங்கா சிக்கி இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். இருந்தாலும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் நிகழ்ச்சியில் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா 'குக் வித் கோமாளி சீசன் 5' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் மூலம் பல சர்ச்சைகளில் பிரியங்கா சிக்கி இருந்தாலும் கடைசியில் சிறப்பாக சமைத்து டைட்டில் பட்டத்தை பிரியங்கா வென்றார்.

வித்யா பாலன் போட்ட ரீல்ஸ் :
தற்போது பிரியங்கா வழக்கம் போல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில், பிரபல நடிகை வித்யா பாலன் அவர்கள், தொகுப்பாளினி பிரியங்காவின் குரலில் இருக்கும் ஒரு ரீல்ஐ தனதுஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'ஏங்க, நான் ஒரு கிரியேட்டர், நான் நிறைய கிரியேட் பண்ணுவேன், நிறைய பிராப்ளம் கிரியேட் பண்ணுவேன்' என்னும் பிரியங்காவின் குரலில் இருக்கும் ரீலை தான் வித்யா பாலன் ரீல் செய்துபதிவிட்டுள்ளார். தற்போது வித்யா பாலனின் அந்த ரீல்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரியங்காவின் பதிவு :
தற்போது, வித்யா பாலனின் ரீல்ஸை பார்த்து நெகிழ்ச்சியடைந்த பிரியங்கா அதை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்து, ' கடவுளே, அருமையான சர்ப்ரைஸ், நான் எனது ஃபேவரைட் வித்யா பாலன் அவர்களுக்கு முதன்முதலில் டப்பிங் ஆர்டிஸ்டாக அறிமுகம் ஆகி உள்ளேன்' என்றவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரின் பதிவில், 'நான் இதைக் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூறி இருந்தேன். அதற்குப் பிறகு இது ரீல் டெம்ப்ளேட் ஆக மாறியதும் அறிந்தேன். ஆனால், அந்த ரீலை நீங்கள் செய்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று வித்யா பாலனை குறிப்பிட்டு பிரியங்கா பதிவிட்டு இருக்கிறார்.

வித்யா பாலன் குறித்து :
பிரியங்காவின் இந்த பதிவை பார்த்த இணையவாசிகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், நடிகை வித்யா பாலன் அவர்கள் மும்பையில் பிறந்தாலும் அவர் ஒரு தமிழ் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். இவர் ஹிந்தி திரைப்படங்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, பெங்காலி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சில்க் ஸ்மிதாவின் பயோபிக் 'டர்ட்டி பிக்சர்' படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார் என்று குறிப்பிடத்தக்கது. மேலும், 2019 ஆம் ஆண்டு வெளிவந்த 'நேர்கொண்ட பார்வை' படம் தான் இவர் தமிழில் நடித்த முதல் படமாகும்.






