சிபுவை தொடர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரோஜா சீரியல் நடிகை – பேரதிர்ச்சியில் ரசிகர்கள்.

0
1359
roja
- Advertisement -

ரோஜா சீரியலில் பிரியங்கா இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் இருந்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் சமீப காலமாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சின்னத்திரை தொடர்கள் இருக்கிறது. கொரோனா லாக் டவுனில் இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சீரியலை விரும்பி பார்த்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

அதில் எப்போதும் சன் டிவி முதலிடத்தை பிடித்து விடும் என்பதில் அய்யமில்லை. அதாவது, சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி முதல் இடம் பிடித்து வருகிறது. அந்த வகையில் சில வருடமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி நடைப்போடும் தொடர்களில் ‘ரோஜா’ சீரியல் ஒன்று. இந்த சீரியல் டிஆர்பியிலும், மக்கள் மனதிலும் முதல் இடத்தைப் பிடித்து இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே இந்த சீரியல் தான் டாப் இடத்தை பிடித்து இருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : உடன் நடித்த நடிகருடன் ஸ்ரீத்து கிருஷ்ணனுக்கு காதலா – வீடியோவை கண்டு ரசிகர்கள் கமெண்ட்ஸ்.

ரோஜா சீரியல்:

இதனால் ரோஜா சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. ரோஜா சீரியலில் ஹீரோவாக சிபு சூர்யனும், ஹீரோயினாக பிரியங்கா நல்காரியும் நடிக்கிறார்கள். இவரை அடுத்து சீரியலின் ஆரம்பத்தில் வில்லியாக ஷாமிலி நடித்து இருந்தார். பின் இவர் கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு விலகினார்.

-விளம்பரம்-

ஹீரோ விலகல்:

இவருக்கு பதில் தற்போது வில்லி அனு என்ற கதாபாத்திரத்தில் அக்சயா நடித்து வருகிறார். சீரியலும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் சிபு சூர்யன் திடீரென சீரியலில் இருந்து விகுவதாக தன் சமூக வலைத்தளத்தில் அறிவித்து இருந்தார். சிபு சூரியன் விலகுவதாக அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு ஷாக்கை கொடுத்திருந்தது. இதனால் ரசிகர்கள் பலர் இவர் சீரியலில் தொடர வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

ரோஜா சீரியல் ப்ரோமோ:

பின் தனது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் சீரியலில் தொடருவதாக சிபு சூரியன் அறிவித்து இருந்தார். மேலும், இந்த சீரியல் பல திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்திருக்கிறார் பிரியங்கா. அதாவது, பிரியங்கா இனிமேல் ரோஜா சீரியலில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதற்கான புரோமோ தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

இரட்டை வேடத்தில் பிரியங்கா:

சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்ட் வரும் என ரசிகர்கள் யோசித்து கூட பார்க்க வில்லை. இப்போது சீரியலில் ரோஜா காணாமல் போய்விட்டார். ரவுடிகள் ரோஜாவை நடுக்கடலுக்கு அழைத்து சென்று அங்கிருந்து கடலில் தள்ளி விடுகின்றனர். இருந்தாலும், ரோஜா பிழைத்துக் கொள்கிறார். ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது? இப்படியிருக்கும் போது ரோஜாவை கண்டுபிடிக்க என்ட்ரி கொடுக்கிறார் ஜெசிகா. போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஜெசிகா ரோலில் நடிப்பதும் பிரியங்கா தான். இனி வரும் காலங்களில் ரோஜா,ஜெசிகா என இரட்டை வேடத்தில் பிரியங்கா கலக்கப் போகிறார்.

Advertisement