வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்காவை வெளுத்து வாங்கிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். தற்போது சோஷியல் மீடியா முழுவதும் காரசாரமாக இதை பற்றிய பேச்சு தான் அதிக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய நடிகை மட்டுமில்லாமல் முன்னாள் உலக அழகியும் ஆவார். இவர் மாடலாக தன்னுடைய கேரியரை தொடங்கினார். பின் இவர் பல விளம்பரங்களில் நடித்து வந்தார். பிறகு 2000 ஆண்டில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் பங்குபெற்று வெற்றியும் பெற்று மிகப்பிரபலமானார் பிரியங்கா சோப்ரா. அதனை தொடர்ந்து இவர் 2002 ஆண்டு மஜீத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து இவர் ஹிந்தியில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தமிழன் படத்திற்கு பிறகு பிரியங்கா சோப்ரா பாலிவுட்டிலேயே தங்கிவிட்டார். தற்போது பிரியங்கா சோப்ரா அவர்கள் ஹாலிவுட், பாலிவுட், வெப் சீரிஸ் என பிஸியாக நடித்து உலக அளவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இதனிடையே பிரியங்கா சோப்ரா அவர்கள் நிக் ஜோனாஸ் என்பவரை காதலித்து வந்தார்.
பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ் திருமணம்:
பின் இவர்கள் 2018 ஆம் ஆண்டு ஜோத்பூர் அரண்மனையில் கிறிஸ்துவ முறைப்படியும், இந்து முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும், வெகு சிறப்பாக நடைபெற்ற திருமணத்தில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அதோடு பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனஸ் 10 வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் தற்போது இத்தம்பதியினர் பெற்றோர்களாகி உள்ளார்கள்.
வாடகை தாய் மூலம் குழந்தை:
இவர்கள் இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று உள்ளன. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் பெயர் குறித்து பிரியங்கா இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை பாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் பாராட்டி இருந்தார்கள். இருந்தாலும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது சரியா? என்ற பல்வேறு கேள்விகளும் எழுந்தது. இந்நிலையில் வாடகை தாய் மூலம் நடிகை பிரியங்கா சோப்ரா குழந்தை பெற்ற விவகாரம் குறித்து வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
தஸ்லிமா நஸ்ரின் பதிவிட்ட டீவ்ட்:
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பது, ஏழை பெண்கள் என்பதாலேயே வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவது சாத்தியம் ஆகிறது. செல்வந்தர்கள் சமூகத்தில் உள்ள வறுமையைப் போக்க வேண்டும். அவர்கள் குழந்தையை வளர்க்க விரும்பினால் வீடு, நாடு, பெயர் தெரியாத அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க வேண்டும். அதனால் பல நன்மைகள் நடக்கும். வாடகை தாய் மூலம் பெறப்படும் குழந்தை முறையானது ஒருவகை சுயநல ஈகோ.
ப்ரியங்காவை கண்டித்து தஸ்லிமா நஸ்ரின் கூறியது:
இதுபோன்று ரெடிமேட் குழந்தைகளை பெறுவதன் மூலம் அவர்கள் எப்படி உண்மையான பெற்றோராக இருக்க முடியும்? சாதாரண முறையில் குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்கள், வாடகை தாய் மூலம் பெற்ற குழந்தைகள் உடன் எப்படி நெருங்கிய உறவை வைத்துக் கொள்ளமுடியும்? என்று கூறியிருக்கிறார். தற்போது இவருடைய கருத்துக்கு சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் சிலர் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். தற்போது சோசியல் மீடியா முழுவதும் இது தொடர்பான பேச்சு தான் காரசாரமாக சென்று கொண்டிருக்கின்றது.