அரண்மனை காவலன், மகாநதி போன்ற படங்களில் நடித்த நடிகர் காலமானார்

0
57
- Advertisement -

பிரபல திரைப்பட நடிகர் மோகன் நடராஜன் காலமாகி இருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக இருந்தவர் மோகன் நடராஜன். இவர் ஸ்ரீ ராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி இருந்தார். இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் தயாரிப்பாளரும் ஆவார்.

-விளம்பரம்-

மேலும், இவர் 1986 ஆம் ஆண்டு மோகன், நதியா நடிப்பில் வெளியாகி இருந்த பூக்களை பறிக்காதீர்கள் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகியிருந்தார். முதல் படமே இவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதற்குப் பின் தொடர்ந்து இவர் வி சண்முகம் என்பவருடன் இணைந்து பல படங்களை தயாரித்து இருந்தார்.

- Advertisement -

மோகன் நடராஜன் திரைப்பயணம்:

அந்த வகையில் இவர் பூ மழை பொழியுது, இனிய உறவு பூத்தது, என் தங்கச்சி படிச்சவ, பிள்ளைக்காக, எங்க அண்ணன் வரட்டும், வேலை கிடைச்சிருச்சு, கிழக்குக்கரை, கோட்டைவாசல், சாமுண்டி, மறவன், பதவி பிரமாணம், கண்ணுக்குள் நிலவு, ஆழ்வார், வேல் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் கன்னடத்திலும் கூட சில படங்களை தயாரித்து இருந்தார்.

மோகன் நடராஜன் குறித்த தகவல்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களின் வெற்றி படங்களையும் இவர் தயாரித்து வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இவர் படங்களிலும் நடித்தும் இருந்தார். அந்த வகையில் இவர் நம்ம அண்ணாச்சி, சக்கரைத்தேவன், கோட்டை வாசல், புதல்வன், பிள்ளைக்காக, பாட்டுப்பாடவா, அரண்மனை காவலன், பதவிப்பிரமாணம், மகாநதி, பட்டியல் போன்ற படங்களில் நடித்து இருந்தார். அதோடு பெரும்பாலும் இவர் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மோகன் நடராஜன் உடல்நிலை:

கடைசியாக இவர் விக்ரம் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்திருந்த தெய்வதிருமகள் என்ற படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்தார். தெய்வத்திருமகள் படம் மிகப்பெரிய அளவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதற்குப் பின் இவர் பெரிதாக எந்த படங்களையும் தயாரிக்கவும் இல்லை, நடிக்கவும் இல்லை. மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே இவர் உடல்நலக்குறைவால் அவஸ்தைப்பட்டு இருந்தார்.

மோகன் நடராஜன் இறப்பு:

இதற்காக இவர் அடிக்கடி சிகிச்சையும் எடுத்து வந்தார். இந்த நிலையில் சென்னையில் நேற்று இவர் சிகிச்சை பலன் இல்லாமல் காலமானார். தற்போது இவருக்கு 71 வயது. இன்று மதியம் திருவொற்றியூரில் இவருடைய இறுதி சடங்குகள் நடைபெற இருக்கிறது. பிரபலங்கள் பலருமே இவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யா அவர்கள் மோகன் நடராஜனுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தி அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.

Advertisement