கமலுக்கு நான் ஏன் வணக்கம் வைக்க வேண்டும் – பல ஆண்டு பிரச்சனை குறித்து பேசிய தயாரிப்பாளர் ராஜன். இதோ அந்த வீடியோ.

0
439
rajan
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி. கணேசனின் தந்தையும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஐசரிவேலனின் 35ம் ஆண்டு நினவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் அவரது மார்பளவு சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ஐசரிவேலனின் சிலையை திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் நடிகர் கவுண்டமணி, இயக்குநர் ஆர்.கே செல்வமணி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த விழா மேடையில் கே ராஜன் வந்த போது அவருக்கு சால்வை அனுவித்து மரியாதை செலுத்தினர். அப்போது ராஜன், மேடையில் இருந்த பெரும்பாலான பிரபலங்களுக்கு தன் வணக்கத்தை தெரிவித்துகொண்டார். ஆனால், கமளுக்கு அவர் வணக்கம் சொல்லவே இல்லை. அவ்வளவு ஏன் கமலை கண்டுகொள்ளக்கூட இல்லை. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து கமல் ரசிகர்கள் பலரும் கே ராஜனை கடுமையாக திட்டி தீர்த்தனர்.

- Advertisement -

வணக்கம் வைக்காத காரணம் என்ன :

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராஜனிடம், கமலுக்கு ஏன் வணக்கம் சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ராஜன், கமலுக்கு நான் ஏன் வணக்கம் சொல்லணும், அவர் தான எனக்கு வணக்கம் சொல்லி இருக்கனும் என்று கூறியுள்ள ராஜன், சில ஆண்டுகளுக்கு முன்னர் கமலுக்கும் அவருக்கும் நடந்த ஒரு பிரச்சனை குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.

கமல் குறித்து ஏற்கனவே பேசிய ராஜன் :

ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து பேசிய ராஜன் , கமலஹாசன் போன் மூலம் வேண்டுதல் விட்ட பிறகு தான் நான் பர்மா பஜாருக்கு போனேன். ஆனால், அந்தத் துரோகி எனக்கு தெரியாது. ஏன் கே ராஜன் பர்மா பஜார் போனார் என்று சொல்லிவிட்டார். கமல்ஹாசன் ரஜினி மாதிரி எல்லாம் கிடையாது. ரஜினி ஒரு நல்ல மகனுக்குப் பிறந்த வெள்ளை உள்ளம் கொண்டவர். கமல் அப்படி கிடையாது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர். நன்றி என்பது கமலுக்கு கொஞ்சம் கூட கிடையாது.

-விளம்பரம்-

அவர் சொல்லித்தான் நான் அடித்தேன்

நான் கமலை பதினைந்து வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் பீச் கோர்ட்டுக்கு இப்பவும் போய்க்கொண்டிருக்கிறேன். அவர் சொல்லித்தான் நான் அடித்தேன். அதற்கு காரணம் கமல் தான். அந்த கலவரத்தை ஏற்படுத்தியது கமல் தான். ஆனால், என்னை கைது செய்தார்கள். கோலிவுட் சினிமா எனக்கு ஆதரவாக நின்றது. ஆனால், அந்த துரோகி கமலஹாசன் எனக்கு இந்த விஷயமே தெரியாது என்று சொல்லிவிட்டார். அன்று முதல் இன்று வரை நான் கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருக்கிறேன்.

அவரால் கெட்டுப்போன பல தயாரிப்பாளர்கள் உள்ளனர் :

இன்று வரை கமல் எதுவுமே சொல்லவில்லை. அப்படிப்பட்டவர் யாருக்கும் உதவ மாட்டார். அவரால் கெட்டுப்போன பல தயாரிப்பாளர்கள் உள்ளனர். ஆனால், ரஜினியால் யாரும் இல்லை. ரஜினியால் 95% தயாரிப்பாளர்கள் வாழ்ந்து உள்ளார்கள். ஏதோ 5 சதவீதம் மட்டும் இப்படி அப்படி ஆகி இருக்கலாம். அது கூட அவரால் இல்லை. இயக்குனர்கள் செய்த தவறால் நடந்து இருக்கலாம்.நான் தேர்ந்தெடுத்து தான் ரஜினியிடம் வேண்டுகோள் வைத்தேன். நான் வேண்டுகோள் வைத்த இரண்டு மணி நேரத்திலேயே அவர் எனக்கு உதவி செய்கிறேன் என்று சொன்னார். உதவி செய்கிறேன் என்று சொன்ன ரஜினியை நாம் வாழ்த்து தான் சொல்ல வேண்டும். அவரை குறை சொல்லக் கூடாது என்று கூறினார்.

Advertisement