அஜித் மனுஷனே கிடையாது, மட்டமானவன். ஆனா விஜய் – தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சொன்ன அதிர்ச்சி தகவல்

0
202
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டம் தொடங்கி தற்போது வரை அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. மேலும், இவர் நடிப்பை தாண்டி நல்ல உள்ளம் கொண்டவர், ஜென்டில்மேன், சமூக சேவை செய்பவர் என்றெல்லாம் மக்கள் கூறியிருக்கிறார்கள். பிரபலங்கள் பலருமே அஜித் உடைய குணத்தை பாராட்டி பேசி இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அவர்கள் அஜித்தை விமர்சித்து பேசி இருந்தது தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

அதாவது, சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர், முதலில் அஜித் மனுஷனே கிடையாது. அவருக்கு நடிக்கவும் தெரியாது, டான்ஸ் ஆடவும் வராது. அவன் அழகா மட்டும் தான் இருக்கிறான். அதனாலே என்னமோ அவன் பெரிய ஆளாகி விட்டான். அவனை மக்களுமே ஏற்றுக் கொண்டார்கள். அவனைப் பற்றி பத்திரிக்கை மீடியாக்களில் வரும் செய்திகள் எல்லாம் அவன் பணம் கொடுத்து செய்ய சொன்னது. அவன் செய்யும் விஷயங்களைப் பற்றி காசு கொடுத்து எழுத, பேச சொல்கிறான்.

- Advertisement -

தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பேட்டி:

அவன் ஒரு மட்டமான மனுஷன். என்னிடம் வாங்கின பணத்தை கொடுக்கவே இல்லை. சொல்லப் போனால், என்னிடம் பணம் வாங்கவே இல்லை என்று சொல்லிவிட்டான். அவன் செய்யும் வேலைகள் எல்லாம் சாதாரண மனிதர்கள் கூட செய்ய மாட்டார்கள். அந்தளவிற்கு மோசமானவன். இந்த தமிழ் சமூகமே அவனை ஜென்டில்மேன் என்று சொல்கிறார்கள். ஆனால், அவன் ஜென்டில்மேன் கிடையாது. ஒரு வருடமாக என்னிடம் வாங்கின பணத்தை அவன் திருப்பிக் கொடுக்கவே இல்லை. இதைப் பற்றி யாருமே என்னிடம் கேள்வியும் கேட்கவில்லை.

அஜித் குறித்து சொன்னது:

காரணம், அதில் நான் சொல்வதில் உண்மை இருப்பதனால் தான் எல்லோருமே அமைதியாகி விட்டார்கள்.
மேலும், விஜய்க்கு இருக்கும் மார்க்கெட் அஜித்திற்கு இல்லை. விஜய் படம் செய்யும் வசூல் வேட்டை அஜித் படம் செய்யவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித்தின் விசுவாசம் தான் நல்ல வசூல் செய்தது. அதற்கு காரணமும் நயன்தாரா தான். அஜித்தை யாருமே அழைத்து படம் எடுக்க மாட்டார்கள். இவனா தான் சென்று படத்தை கமிட் செய்கிறார். அஜித்தை விரும்புபவர்கள் ரொம்ப குறைவு. காரணம், அவர் தனக்கான பணத்தை முன்னாடியே வாங்கி விடுவார்.

-விளம்பரம்-

அஜித் சினிமா பயணம்:

அவர் நடித்து கொடுத்த படம் வியாபாரம் ஆகுமா? ஆகாதா? என்று கூட யோசித்து பார்க்க மாட்டார். அப்படித்தான் சத்யஜோதி பிலிம் நிறுவனத்தில் இவர் விவேகம் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் தோல்வியடைந்தது. அதனால் தான் அவர் மீண்டும் விசுவாசம் படத்தில் நடித்து கொடுத்தார். ஒருமுறை அவர் ரத்தினத்தை சாய்பாபா கோவிலில் சந்தித்து, என்னை வைத்து படம் எடுங்கள் என்று கெஞ்சி இருக்கிறார். இவர் இப்படி கீழே இறங்கி வந்து கேட்டதால் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார்கள்.

அஜித் குணம்:

பின் ரத்தினத்துடன் ஏற்பட்ட பிரச்சனையினால் போனி கபூர் அஜித்துக்கு வாய்ப்பை கொடுத்தார். அஜித்தால் ஒரு 10 தயாரிப்பாளர்களை கூட தன் பக்கம் பிடித்து வைக்க முடியவில்லை. ரொம்ப நாட்களாக சக்கரவர்த்தி உடன் தான் அஜித் பயணித்து இருந்தார். பின் அவருடன் ஏற்பட்ட பிரச்சனையினால் வேறு தயாரிப்பாளரை மாற்றி விட்டார் அஜித். அஜித் ஒன்னா நம்பர் திருடன். அவன் செய்த தவறால் தான் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது என்றெல்லாம் மோசமாக பேசியிருக்கிறார். இப்படி இவர் அஜித்தை குறித்து கீழ் தரமாக பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement