மணிமேகலை மற்றும் பிரியங்கா சர்ச்சை குறித்து தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் கொடுத்திருக்கும் பேட்டி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே மணிமேகலை- பிரியங்கா சர்ச்சை தான் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி 5’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து திடீரென மணிமேகலை விலகியது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக மணிமேகலை போட்ட பதிவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி நான் இல்லை. இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார். குறிப்பாக, அவர் ஆங்கர் பார்ட்டில் எல்லாம் தலையிடுகிறார். அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டும். அதை அவர் அடிக்கடி மறந்து விட்டு வேண்டுமென்றே என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். அதனால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று எமோஷனலாக பதிவிட்டு இருந்தார்.
மணிமேகலை-பிரியங்கா விவகாரம்:
இப்படி இவர் சொன்னது தொகுப்பாளினி பிரியங்காவை தான் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பலருமே மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் , பிரியங்காவை விமர்சித்து திட்டியும் வருகிறார்கள். ஆனால், தற்போது சிலர் ப்ரியங்காவிற்கு ஆதரவாகவும் பேசி இருக்கிறார்கள். அந்த வகையில் குரேஷி, நிகழ்ச்சியில் நடந்தது என்ன என்றும், பிரியங்காவுக்கு ஆதரவாக பேசி வீடியோ போட்டு இருந்தார். அதே போல் பாவனி , டிஜே பிளாக் ,சூப்பர் சிங்கர் பூஜா, சுனிதா ஆகியோர் பிரியங்காவிற்கு ஆதரவாக தங்களின் கருத்துக்களை பேசியுள்ளார்கள்.
தயாரிப்பாளர் ரவீந்திரன்:
தற்போது இந்த பிரச்சனை குறித்து தயாரிப்பாளர் ரவீந்திரன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில், இது என்ன பிரச்சனை என்று யாருக்கும் தெரியவில்லை. மணிமேகலை தன் சுய கௌரவத்தை விட்டு விட்டு நிகழ்ச்சி பண்ண முடியாதுன்னு வெளியே வந்திருக்காங்க. அவங்க முன்னாள் ஆன்கர் என்று ஒரு வார்த்தையை பயன்படுத்தி வீடியோவில் பேசியிருக்காங்க. அவங்க பிரியங்கா வைத்தான் இப்படி சொல்றாங்கன்னு தெரியுது. அதை ஏன் தைரியமாக அவங்க சொல்லவில்லை.
பிரியங்காவின் கேரக்டர் பேசும் பொருளாகிவிட்டது:
மேலும், நான் பிரியங்காவுக்கு ஆதரவாக இப்படி பேசவில்லை. நான் அவர்களின் இந்த விளையாட்டுக்கு தான் கருத்து சொல்கிறேன். அவர்களின் பர்சனல் லைஃப்க்கு நான் போக விரும்பவில்லை. இப்போ பிரியங்காவின் கேரக்டர் மற்றும் அவரின் குடும்பத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டார் மணிமேகலை. அதேபோல் தற்போது ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்திருக்கின்றது. அந்த ஆடியோவோட உண்மைத் தன்மை பற்றி தமிழ் பொண்ணு மணிமேகலை விளக்கம் கொடுத்து இருக்கணும்.
மணிமேகலை முதிர்ச்சி இல்லாமல் செய்தது:
எந்த இடத்தில் பிரச்சனை இல்லை. சுய கவுரவம் எல்லாம் இருந்தா எந்த தயாரிப்பாளரும் படம் எடுக்க முடியாது. எந்தத் துறையில் இந்த பிரச்சனை இல்லை. பிரியங்கா யார் என்று பிரியங்காவின் குடும்பத்திற்கு தெரியும். பிரியங்காவிற்கு வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு தெரியும். மணிமேகலை இந்த சூழ்நிலையை முதிர்ச்சி இல்லாமல் கையாண்டுவிட்டார். மணிமேகலையோடு குடும்பத்தை பற்றி இங்கு யாரும் பேசவில்லை. மணிமேகலையோட முன் வாழ்க்கை பற்றி யாரும் இங்கு பேசவில்லை. ஆனால், பிரியங்காவோட தனிப்பட்ட வாழ்க்கை இங்கு பெரும் பேசும் பொருளாகி இருக்கிறது என்று கூறியுள்ளார்.