விஸ்வரூபத்தில் ரஜினியை ஹீரோவா போட வேண்டாம்ன்னு தடுத்த தயாரிப்பாளர்- அப்போ ரஜினி ஹீரோவா நடித்த முதல் படம்?

0
610
rajini
- Advertisement -

தன்னை ஹீரோவாக போட வேண்டாம் என்று நிராகரித்த தயாரிப்பாளரிடம் தொடர்ந்து ரஜினி படங்களை நடித்து கொடுத்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் கர்நாடக மாநிலத்தில் பேருந்து நடத்துனராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி இன்று இந்திய திரையுலகில் மிகப் பெரிய ஸ்டாராக ஜொலித்து கொண்டிருக்கிறார். இதுவரை இவர் 168 படங்களில் நடித்து முடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் குமார் இயக்குகிறார்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் என பலரும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினி முதன் முதலாகத் ஹீரோவாக நடித்திருந்த படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

ரஜினியின் திரைப்பயணம்:

அபூர்வ ராகங்களில் அறிமுகமான ரஜினி தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடித்து வந்தார். பின் கலைஞானம் எழுதிய ஆறு புஷ்பங்கள் என்ற படத்தில் விஜய் குமார் நாயகனாக நடிக்க, இரண்டாவது நாயகனாக ரஜினி நடித்தார். இந்த படம் 1977 இல் வெளியாகி இருந்தது. அந்த காலகட்டத்தில் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்ப தேவரின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான கலைஞானத்திடம், நீ படம் தயாரித்தால் முழு பைனான்ஸ் நான் செய்கிறேன் என்று சொன்னார். கலைஞானமும் மகிழ்ச்சியாக ஒரு கதையை தயார் செய்து அவரிடம் சொன்னார். அந்த கதையின் பெயர் விஸ்வரூபம் என்றும் சொன்னார்.

-விளம்பரம்-

ரஜினியை நிராகரித்த தயாரிப்பாளர்:

பின் கதையின் பெயரும் தயாரான பின்பு ரஜினியை சந்தித்து அட்வான்ஸ் கொடுத்தார். முதன்முதலில் ஹீரோவாக நடிக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் ரஜினி இருந்தார். அதற்கு அவர் வாங்கிய சம்பளம் 50 ஆயிரம். ரஜினியை ஹீரோவாக ஒப்பந்தம் செய்த பின் தேவரிடம் போய் கலைஞானம் விஷயத்தை சொல்ல, உடனே தேவர், ரஜினி ஹீரோவாக கூடாது வில்லனாக நடிக்க வைக்கலாம். ரஜினி ஏற்கனவே பல படங்களில் நடித்திருந்தாலும் ஹீரோவாக நடித்தது இல்லை. அந்த வகையில் ஹீரோவாக அவர் புதுமுகம். அப்படி புதுமுகத்தை ஹீரோவாக்கினால் பைனான்சியர்கள் பணம் தர மாட்டார்கள் என்று கூறியிருந்தார்.

ஹீரோவாக ரஜினியின் முதல் படம்:

ரஜினியிடம் ஹீரோவாக நடிக்க வைப்பதாக கூறி விட்டு எப்படி சொல்வது என கலைஞானம் வேறு இடங்களில் பைனான்ஸ் வாங்கி படத்தை தயாரித்தார். படத்தின் கதையை கேட்ட விநியோகஸ்தர் ஒருவர் படத்தின் கதை தங்கை கதாபாத்திரத்தை மையப்படுத்தி இருப்பதால் விஸ்வரூபம் என்பதை விட தங்கையின் பெயரான பைரவி பொருத்தமாக இருக்கும் என்று சொன்னார் கலைஞானம் பைரவி என பெயரான பைரவி என்று மாற்றினார். அதுதான் ரஜினி ஹீரோவாக நடித்த முதல் படம். இந்த படம் 1978 வெளியாகி இருந்தது. இந்த படத்தின் உரிமையை வாங்கிய எஸ்.தாணு பிளாசா திரையரங்கில் ரஜினிக்கு 35 அடி உயர கட் அவுட் வைத்ததோடு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் அளித்தார்.

சூப்பர் ஸ்டார் அடைமொழி:

ஆனால், அதற்கு முன்பே மதுரை ரசிகர் ஒருவர் ரஜினி வில்லனாக நடித்த படத்தில் சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியோடு தியேட்டரில் பேனர் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பைரவி வெளியான அன்றே திரையரங்களில் படத்தை பார்த்த தேவர் ரஜினியை வைத்து இரண்டு படங்களில் நடிக்க முன்வந்துள்ளார். அப்படி உருவானது தான் தாய்மீதுசத்தியம். ஆனால், படம் வெளிவந்த பிறகு அவர் மறைந்தாலும் அவர் மீதிருந்த மரியாதையால் தேவர் பிலிம்ஸில் தொடர்ச்சியாக ரஜினி படங்கள் நடித்துக் கொண்டுத்தார்.

Advertisement