தன்னை விமர்சிக்கும் ஹேட்டர்ஸ்களுக்கு வனிதாவின் வீடியோவை பகிர்ந்து பதிலடி கொடுத்த புகழ்.

0
1300
pugal
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பானது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் இருந்தது.

-விளம்பரம்-

அதோடு இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதற்கு முக்கிய காரணம் புகழ். மேலும், இந்த நிகழ்ச்சியை புகழுக்காகவே பார்க்கின்ற ஒரு கும்பலும் சோசியல் மீடியாவில் உள்ளது. குக் வித் கோமாளி-யின் நாயகன் என்று சொல்லுமளவுக்கு காமெடி மழை பொழிந்து தள்ளி இருந்தார், இதன் மூலம் இவருக்கு சினிமாவிலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் வருகிறது.

இதையும் பாருங்க : பாக்கியலட்சுமியில் இருந்து விலகியது ஏன் – முதன் முறையாக வீடியோ மூலம் விளக்கமளித்த ஜெனி.

- Advertisement -

சமீபகாலமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் புகழ் கண்டிப்பாக இடம் பிடித்து விடுகிறார் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா-ராணி நிகழ்ச்சியில் கூட புகழ் தான் ஹீரோ ரேஞ்சுக்கு பேசப்பட்டு வருகிறார் அதேபோல புகழ் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் ரொமான்ஸ் செய்வது போலத்தான் காண்பிக்கப்பட்டு வருகிறது.

Image

இதனாலேயே புகழை வெறுக்கும் சில கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது. இப்படி ஒரு நிலையில் தன்னுடைய ஹேட்டர்ஸ்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக புகழ் தன்னை பற்றி வனிதா பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் புகழ் குறித்து பேசும் வனிதா, புகழ் அனைத்தையும் கண்டெண்ட்காகத்தான் செய்கிறான். ஷூட்டிங் முடிந்தால் அவர்களை யார் என்றே தெரியாத போல சென்றுவிடுவான். இதையெல்லாம் புரியாமல் சிலர் பேசுகிறார்கள் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement