மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் கண் தானம் மூலம் பல பேர் பார்வையை பெற்றுள்ள செய்தி பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கன்னட திரையுலகில் பவர்ஸ்டாராக கொடி கட்டி பறந்தவர் புனீத் ராஜ்குமார். கன்னட மொழியில் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படையே உள்ளது. இவர் நடிகர் மட்டுமில்லாமல் பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்களில் பணிபுரிந்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இவர் நடிகராக மட்டுமல்லாமல் இவர் 15 பள்ளிகளை நடத்தி அதில் அனைவருக்கும் இலவச கல்வியை கொடுத்திருக்கிறார். அதேபோல 16 முதியோர் இல்லங்கள், 19 கோசாலை போன்றவை தன்னுடைய சொந்தப் பணத்திலேயே மக்களுக்கு உதவி செய்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல்இவர் 1800 மாணவர்கள் படிப்பதற்காக கல்வி வழிவகை செய்துள்ளார். இப்படி இலவச பள்ளிகள், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் என கர்நாடக மக்களுக்காக இவர் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். அவ்வளவு ஏன் இறுதியாக அவர் இறந்த போது கூட அவர் கண்ணை தானாம் செய்துவிட்டு தான் சென்றார்.
அவரது தந்தை ராஜ்குமாரின் பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளைக்கு அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இப்படி ஒரு நிலையில் தானமாக வழங்கப்பட்ட புனீத் ராஜ் குமாரின் கண்களை கொண்டு நான்கு பேருக்கு பார்வை அளிக்கப்பட்டுள்ளது பலரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. புனித் ராஜ்குமார் கண்களின் கார்னியாக்களின் மேல் அடுக்குகள், சூப்பர்பிசியல் கார்னியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு நபர்களுக்குப் பொருத்தப்பட்டுள்ளது.
அதேபோல் கார்னியாவின் ஆழமான அடுக்குகள் எண்டோடெலியல் அல்லது ஆழமான கார்னியல் அடுக்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டு பேருக்குப் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நான்கு பேருக்குப் பார்வை கிடைத்துள்ளது.புனித் இன் கண்களை தானமாக பெற்றவர்கள் அனைவருமே கர்நாடகாவை சேர்ந்த இளைஞர்கள் தான் இவர்களில் 4 பேரின் அறுவை சிகிச்சைகளும் கடந்த சனிக்கிழமை காலை பதினொன்று முப்பதுக்கு தொடங்கி ஐந்து முப்பது மணி வரை நடைபெற்றதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.