தேர்வு பேப்பரில் இப்படியா..! விஜய் பற்றி இந்த பையன் என்ன எழுதி இருக்கான் பாருங்க.!

0
349
thalapathy-vijay

தமிழ் சினிமாவில் இளையதளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர் என்பது யாரும் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அதே போல அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் ஒரு தலைவனாகவே பார்த்து வருகின்றனர்.

vijay

நடிகர் விஜய்க்கு இளம் ரசிகர்களை போலவே இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர் வரை கோடிக் கணக்கான ரசிகர்களும் உள்ளனர். அதனை நிரூபிக்கும் விதமாக தற்போது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் ஒரு தேர்வுத்தாளில் ,நீ விரும்பும் தலைவருள் யாரேனும் ஒருவரை பற்றி கட்டுரை எழுதுக என்ற கேள்வி இடம்பெற்று இருக்கிறது. அதற்கு கீழே , நான் விரும்பும் தலைவர் விஜய், அவர் மிகவும் அழகாக இருப்பார் என்று பதில் அளிக்கபட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த கேள்விக்கு இப்படி ஒரு வேடிக்கை தனமாக பதில் எழுதியுள்ள அந்த சிறுவனின் புகைப்படம் ஒன்றும் அந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. குழந்தைகளுக்கு விஜய் பிடிக்கும் என்பது உண்மை தான். ஆனால், இளம் ரசிகர்களை போலவே 5 ஆம் வகுப்பு சிறுவனும் நடிகர் விஜய்யை தலைவராக பார்ப்பது தான் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது