இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் என்ன பிரச்சனை என்று புஷ்பா 2 தயாரிப்பாளர் ரவிசங்கர் அளித்திருக்கும் விளக்கம் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி கொண்டு இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல படங்கள் பெற்று இருக்கிறது. அந்த வகையில் , கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஷ்பா. இந்தப் படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார்.

மேலும், இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஆந்திரா பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
புஷ்பா 2 :
அதைத்தொடர்ந்து ‘புஷ்பா 2’ திரைப்படம் தற்போது உருவாகி இருக்கிறது. புஷ்பா 2 படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுஇருக்கும் நிலையில், ஒரு வழியாக வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த இரண்டாம் பாகத்திலும், அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பகத் பாஸில் வில்லனாக நடித்துள்ளார். மேலும், சுனில், ராவ் ரமேஷ், பிரம்மாஜி மற்றும் ஜெகதீஷ் பிரதாப் போன்ற முக்கிய நடிகர்கள் படத்தில் நடித்துள்ளனர்.
Devi Sri Prasad fire speech on stage today 🔥🔥🔥🥵🥵
— Vamc Krishna (@lyf_a_zindagii) November 24, 2024
Appatlo Boyapati ki ichipadesadu
Eroju #Pushpa2 producers ki ichipadesadu
When it comes to giving back on stage @ThisIsDSP comes first 🥵🔥
What he spoke is 100% correct undoubtedly!!#Pushpa2TheRule pic.twitter.com/8xGoGYnPrZ
புஷ்பா 2 ஈவென்ட் :
அதோடு புஷ்பா 2 படத்திற்கு, குபா ப்ரோஜெக் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்துள்ளார். தற்போது பட குழுவினர் இந்தியா முழுவதும் பிரமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளனர். அந்த வகையில் தமிழ் மக்களிடம் படத்தைக் கொண்டு சேர்க்கும் விதமாக சென்னையில் ‘புஷ்பா 2’ ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு மேடையில் பேசியிருந்தார்கள். அந்த வகையில் நிகழ்ச்சி மேடையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் புஷ்பா 2 தயாரிப்பாளர் குறித்து பேசிய விஷயம் சர்ச்சையை கிளப்பியது.
தேவி ஸ்ரீ பிரசாத் பேசியது:
அதில், 'ரவி சார் நான் ஏதோ ஸ்டேஜ்ல ஏறி நிறைய நேரம் பேசுறேனு நினைக்காதீங்க. நீங்க என்னவோ டைமுக்கு பாட்டு குடுக்கல, டைமுக்கு பேக்ரவுண்ட் ஸ்கோர் கொடுக்கல, டைமுக்கு ப்ரமோஷனுக்கு வரவில்லை என்று சொல்றீங்க. உங்களுக்கு என் மேல் அதிக அன்பு இருக்கிறது. ஆனால், அன்பை விட அதிகமாக கம்பளைண்ட் என் மீது ஏன் இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை என்று பேசியிருந்தார். அதோடு சமீபத்தில் வெளியான தகவலின் படி, டிஎஸ்பி சரியான நேரத்தில் பின்னணி இசை மற்றும் பாடல்களை தரவில்லை என்று, இசையமைப்பாளர்கள் தமன் மற்றும் அஜனீஸ் புஷ்பா 2 படத்தில் சேர்த்துக் கொண்டுள்ளதாக கூறப்பட்டது.
https://www.youtube.com/watch?v=DUN75x32i54
ரவிசங்கர் விளக்கம்:
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் புஷ்பா 2 படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ரவிசங்கர் விளக்கமளித்துள்ளார். அதில், 'தேவி ஸ்ரீ பிரசாத் அப்படி சொன்னதில் எந்தவிதமான தவறும் இல்லை. அவர் ஒரு சினிமா வசனத்தைப் போலத்தான் பேசினார். எங்களுக்குள் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாகத்தான் இருக்கிறோம். இசைத்துறையில் அவர் இருக்கும் வரை எங்கள் படங்களுக்கு அவர் இசை அமைப்பார். நாங்களும் அவருடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம் என்று கூறியுள்ளார்.






