காணாமல் போனதாக கூறப்பட்ட புஸ்பவனம் குப்புசாமி மகள் வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ.

0
6702
Pushpavanam

பிரபல நாட்டுப்புற கலைஞர் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் மர்மமான முறையில் மாயமானார். போலீஸ் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நியூஸ் சமூக வலைத்தளங்களில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய நாட்டுப்புற பாடகர் மற்றும் திரைப் பட பின்னணிப் பாடகராக வலம் வருபவர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தன்னுடைய நாட்டுப்புற இசையின் மூலம் ஒட்டு மொத்த தமிழக மக்களின் மனதையும் கவர்ந்தவர். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்று உள்ளார். இவர் சென்னை பல்கலைக்கழக இசைத் துறையில் பயின்ற அனிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி வேற யாரும் இல்லைங்க அனிதா குப்புசாமி. இவருடைய மனைவி அனிதா குப்புசாமியும் பிரபல பாடகி ஆவார்.

இவர்கள் இருவரும் இணைந்து நிறைய மேடைகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடல்களை பாடி உள்ளார்கள். மேலும், இவர்கள் இருவருமே இணைந்து நிறைய நாட்டுப்புற பாடல்கள் இடம் கிராமியப் பாடல்களை எழுதி பாடி உள்ளார்கள். வெளிநாடுகளில் தமிழர்கள் நடத்தும் விழாக்களில் இவர்கள் தங்களுடைய இசை நிகழ்ச்சியை வழங்கி உள்ளார்கள். மேலும், இவர்களுக்கு பல்லவி, மேகா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள். தற்போது இவர்கள் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் விஸ்வநாதன் தெருவில் வசித்து வருகிறார்கள். அதில் மூத்த மகள் பெயர் பல்லவி. இவர் பல் மருத்துவராக பணி புரிகிறார். இரண்டாவது மகள் மேகா.

இதையும் பாருங்க : பில்லா கூட இல்லையாம்,ரஜினியின் இந்த படத்தை தான் அஜித் ரீ-மேக் செய்ய விரும்பினாராம்.

- Advertisement -

இந்நிலையில் தன்னுடைய மூத்த மகள் பல்லவியை காணவில்லை என்று புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் சென்னை அபிராமபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும். அதோடு இவருடைய மகள் பல்லவி ஞாயிற்று கிழமை இரவு 8 மணி முதல் இருந்த காணவில்லை என்றும், ஞாயிற்று கிழமை இரவு என்னுடைய மூத்த மகள் பல்லவிக்கும், இளைய மகள் மேகாவுக்கும் இடையே நிறைய வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி திட்டி கொண்டும் சண்டை போட்டு இருந்தார்கள். பின் பல்லவி பயங்கரமாக கோபம் அடைந்தால். உடனே பல்லவி வீட்டிலிருந்து காரை எடுத்துக் கொண்டு தனியாகவே வெளியே சென்று விட்டார் என்று புஷ்பவனம் குப்புசாமி கூறியதாக பேசப்பட்டது.

Fake news

Pallavi Agarwal P K ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಸೋಮವಾರ, ಡಿಸೆಂಬರ್ 16, 2019

இந்தநிலையில் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் தன்னை யாரும் கடத்தவில்லை என்றும்,நான் காணாமல் போகவில்லை என்றும் தற்போது வீட்டில்தான் இருக்கிறேன் எனது பெற்றோர்களும் என்னுடன்தான் இருக்கிறார்கள். எனவே ,இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று சுய விளக்கம் அளித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement