சட்டசபையிலும் விவாதிக்கப்பட்ட விஜய்யின் ஐடி ரெய்டு விவகாரம். வீடியோ இதோ.

0
1375
Vijay
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இளையதளபதி விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிகில் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் நெய்வேலியில் இருந்தபோது வருமானவரித் துறையினர் அங்கிருந்து விஜயை நேராக அழைத்து சென்று அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள். விஜய் வீட்டில் மட்டுமல்லாமல் பிகில் படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.

-விளம்பரம்-

வீடியோவில் 9:45 நிமிடத்தில் பார்க்கவும்

- Advertisement -

மேலும், இந்த சோதனையில் வருமான வரி கணக்கில் காட்டப்படாத 77 கோடி ரொக்கப்பணம் மற்றும் கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் விஜய் வீட்டில் இருந்து எந்த ஆவணமும் சிக்கியதா இல்லையா என்று வருமான வரித்துறையினர் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. வருமான வரித்துறையின் சோதனை முடிந்த நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் படத்தின் படபிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டார் நடிகர் விஜய்.

பட்ஜெட் மீதான விவாதம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் போது தி மு க எம் பி தயாநிதி மாறன்,விஜய்யிடம் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து விவாதித்தார். அப்போது பேசிய அவர், தமிழக்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு வரிச்சலுகையாக 1 கோடி அளித்துள்ளார்கள் வரவேற்கத்தக்க விஷயம் தான். அனால், , நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித் துறையினர், கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென சோதனை நடத்தினர். மேலும், “மாஸ்டர்” திரைப்படத்துக்காக, என்எல்சி நிறுவன வளாகத்தில் படப்பிடிப்பில் இருந்த விஜயை, சென்னைக்கு வலிய அழைத்து வந்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

-விளம்பரம்-

இதனால் படகுழுவிற்கு எவ்வளவு நஷ்டம் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த், வருமான வரியை முறையாகக் கட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, ரூ 66.22 லட்சம் அபராதம் விதித்து ரஜினிக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. அதை எதிர்த்து ரஜினி மேல்முறை செய்ய அந்த நோட்டீசை அமலாக்கத்துறை ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement